கொரோனா
வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்கள்
இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனா
சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என
அழைக்கப்படும் நோவல் கொரோனா வைரஸ் நீர்த்துளிகள், அசுத்தமான பொருட்கள் மற்றும் கண்
நோய் போலப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை போல நேராகப் பார்ப்பதன் மூலமாகவும் பரவும்
என்று தெரிவித்திருந்தது.
இதனால்
சீன வங்கிகள், தங்களிடம் டெபாசிட் செய்யும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் இருப்பு
வைத்துள்ள ரூபாய் நோட்டுக்களை அல்ட்ரா வைலட் லைட் கதிர்வீச்சுகள் மூலம் வைரஸ்களை
கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. எனவே தங்களிடம் வரும் ரூபாய் நோட்டுக்களை 14
நாட்களுக்கு இப்படி சுத்தம் செய்யும் பணியில் சீன வங்கிகள் செய்ய வேண்டும் என்று,
சீனாவின் மத்திய வங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது.
மேலும்
பழைய ரூபாய் நோட்டுகளை அளித்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டு
வருகின்றன. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வதும் சீனாவில் அதிகரித்து
வருகிறது.
2017-ம்
ஆண்டு வெளியான ஆய்வு முடிவுகளின் படி சீனாவில் மாதத்திற்கு 1023.71 ரூபாய் ரொக்கப்
பணம் இருந்தால் போது, மீதமெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே ஒருவரால்
செய்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக