தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன.
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகில் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.
சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயர்.
உதாரணமாக, சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாத பௌர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையில் தான் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
புது வருட துவக்கம் :
இன்னும் சில தினங்களில் விகாரி வருடம் முடிந்து சார்வரி வருடம் பிறக்க உள்ளது.
சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பங்குனி மாதம் 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.21 மணிக்கு துவங்குகின்றது. அடுத்து பிறக்க போகின்ற சார்வரி வருடத்திற்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.
இடைக்காடர் சித்தர் இயற்றிய தனது நூலான 'அறுபது வருட வெண்பா" என்ற நூலில் சார்வரி வருடம் பற்றி உள்ள பாடல் பின்வருமாறு
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு
பாடலின் பலன்கள் :
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகை சாதி மக்களும் வீரமிழந்து, தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழை இருக்காது இதனால் நன்செய் பயிர்களின் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களின் விளைச்சல் பாதிக்கும். இதனால் மக்கள் தானிய விளைச்சல் இன்றி பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதே இந்த வெண்பா சொல்கிறது.
சார்வரி வருடம்... பொதுவான பலன்கள் :
தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு போட்டியும், ஏற்ற இறக்கமாக இருக்கும் காலமாக அமையும்.
ஜவுளி, இரும்பு மற்றும் நிலக்கரி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக அமையும்.
அனைத்து வியாபாரிகளும் அரசு நிர்ணயித்த வரியின் அடிப்படையில்தான் வியாபாரம் செய்ய நேரிடும்.
குரு மகரத்தில் நீசம் பெற்று இருப்பதால் கோவில் அர்ச்சகர்களுக்கு ஆகாது. போலி ஆன்மிகவாதிகள் பெருகுவார்கள்.
மதத்தின் பெயரால் ஆங்காங்கே கலவரங்கள் உண்டாகும். பெண்களின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்.
வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும்.
பிறக்க போகின்ற தமிழ் வருடத்தில் நன்மைகள் மிகுதியாகவும், தீமைகள் குறைவாகவும் கிடைக்கப்பெற்று அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் கண்டிட உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் 'தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது
பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டு சார்வரி வருடத்தில் நவ நாயகர்கள் தரும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்.
சார்வரி வருட இராசிபலன்கள்
அறுபதுவருடவெண்பா
பதிலளிநீக்குமுழுமையாக
இருந்தால் அனுப்பவும்