Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 மார்ச், 2020

வாக்காளர் அடையாள அட்டையில் நாய் புகைப்படம்.! அதிர்ச்சி அடைந்த முதியவர்.!

Image result for வாக்காளர் அடையாள அட்டையில் நாய் புகைப்படம்.! அதிர்ச்சி அடைந்த முதியவர்.!



மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 64 வயது முதியவர் சுனில் கர்மாகர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட புதிய அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் படம் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த முதியவர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் அந்த அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு நாய் படத்தை நீக்கி, வேறு அட்டையை அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்யும்போது ஏற்பட்ட தவறால் இதுபோன்று நிகழ்வு நடந்திருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக