கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாத வங்கிக் இஎம்ஐ-கள் தள்ளிப்போட பட்டுள்ளது இதை சாதமாக பயன்படுத்தி சைபர் கொள்ளையர்கள் நூதன முறை திருட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது
266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிப்பு
அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்டோர் மொத்தம் 3,373 பேரில் 266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்
அதில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களில் 9 விழுக்காட்டினர் பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டினர் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் எனவும் தெரிவித்தார்.
33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்
அதேபோல்குறிப்பாக 33 விழுக்காட்டினர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவென்றால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் 17 விழுக்காட்டினர் எனவும் கூறினார்.
மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த தேவையில்லை
அதேபோல் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம். இது அனைத்து வகை கடன்களுக்கும் பொருந்தும். தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பி தெரிவித்தது.
ரூபா ஐபிஎஸ் டுவீட்
இந்த நிலையில் ரயில்வே துறையில் ஐஜியாகவும் முன்னாள் சிறைத்துறை டிஐஜி பணிபுரிந்து வந்த ரூபா ஐபிஎஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சைபர் கிரைம் கொள்ளையர்கள் நூதனமுறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓடிபி எண்ணை கூறும்படி கேட்பார்கள்
அதில்தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இஎம்ஐ-ஐ தள்ளி போட வேண்டும் என்றால் தங்கள் எண்ணுக்கு வந்திருக்கும் ஓடிபி எண்ணை கூறும்படி வங்கி அதிகாரிகள் போல் பேசுவதாகவும், ஓடிபி கூறிய சில விநாடிகளில் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் திருட்டுபோகி விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக