கோவிட்-19 நோயத்தொற்றுப் பரவலின் காரணமாக முகத்துக்கு அணியும் பாதுகாப்பு மாஸ்க்குக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாஸ்க் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய கைத்தறி நிறுவனமான காதியில் மாஸ்க்குகள் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் காதியின் உற்பத்தி ஆலைகள் 16 செயல்படுகின்றன. அந்த 16 உற்பத்தி நிறுவனங்களிலும் ஃபைபர் மாஸ்க்குகள் தற்போது தயார் செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காதி நிறுவனம் 10000 மாஸ்க்குகளை தயார் செய்து இலவசமாகப் பயன்பாட்டுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது. அதில் 3000 மாஸ்க்குகள் ஏற்கனவே தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கியிருக்கிறது.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்காக தங்களுடைய மாநிலத்திலிருந்து போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் ஒன்று தான் இந்த மாஸ்க் உற்பத்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு காதியில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் N95 மாஸக்குகள் போன்றோ அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் போன்றோ அல்ல. இவை காதி ஃபேப்ரிக்கில் தயாரிக்கப்படும் சாதாரண மாஸ்க்குகள் தான். ஆனால் இவையும் ஒருவித குறைந்தபட்ச பாதுகாப்பை நமக்கு அளிக்கக் கூடியவை என்பதால், ஓரளவுக்கு பாதுகாப்பானதாகவும் உதவிகரமாகவும் இருக்கும். குறிப்பாக, ஏதேனும் இடத்தைத் தொட்டுவிட்டு, உங்கள் கைகளை முகத்தில் வைக்காமல் இருப்பது, யாரேனும் தும்மினாலோ அல்லது கிருமிகள் இருக்கும் நீர்த்துளிகள் முகத்தில், சுவாசப் பாதை வழியே செல்லாமலும் தடுக்கப் பயன்படும்.
சில ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு நம்முடைய கைகளால் குறைந்தது 20 முறையாவது முகத்தைத் தொடுகிறோமாம். அதற்குக் காரணம் நம்முடைய சுற்றுச்சூழல். நம்முடைய காற்றின் வழியேயும் பிற பொருள்களின் வழியேயும் பேத்தோஜீன்கள் நமக்குக் கடத்தப்படுவதால், அது இயல்பாகவே நம்முடைய முகங்களையும் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியையும் தொடுகிறோம். அதனால் இது போன்ற மாஸ்க்குகள் பொது இடங்களுக்கு அடிக்கடி செல்லுகின்ற, பொருள்கள் வாங்கச் செல்கின்ற பொது மக்களுக்கு ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த காதி மாஸ்க்குகளில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், இவற்றை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்சமயம் மெடிக்கல் கிரேடு மாஸ்க்குகள் கிடைப்பதில்லை. உண்மையிலேயே யாருக்குத் தேவையோ அங்கு மட்டும் சப்ளை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகள், மருத்துவர்கள் போன்ற தேவைப்படும் இடங்களில் மட்டும் அந்த மாஸ்க்குகள் கிடைக்கின்றன. அதனால் மற்ற இடங்களில் பெரும்பாலும் ஃபேப்ரிக் மாஸ்க்குகளே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த காதி மாஸ்க்குகளின் விலை ஒன்று 18 ரூபாய். இலவசமதகவும் தேவைப்படும் இடங்களில் வழங்கப்படுகிறது. லாக்டவுன் காலகட்டமான இப்போது, மாஸ்க் தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு மட்டும் இயங்கி வருகிறது. மாநிலத்தின் தேவையைத் தாண்டி, பாதிக்கப்பட்டிருக்கின்ற மற்ற இடங்களுக்கும் மாஸ்க் தயாரித்து அனுப்பும் திட்டம் இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக