உலகம் முழுக்க
ஏற்கனவே உலகம் முழுக்க, பகார்டி (Bacardi) நிறுவனம் சுமார் 1.1 மில்லியன் லிட்டர் (11 லட்சம் லிட்டர்) ஹேண்ட் சானிட்டைஷர்களை தன் பங்குக்கு தயாரித்துக் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. பகார்டி (Bacardi) நிறுவனத்துக்கு அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்காட்லாந்து, பொர்டோ ரிகோ போன்ற நாடுகளில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன.
சரக்கை ஒதுக்கி
இந்த 11 லட்சம் லிட்டர் ஹேண்ட் சானிட்டைசர்களை உற்பத்தி செய்ய, தேவையான ஆல்கஹாலை தனியாக வைக்கச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த திட்டத்தில், இந்திய நாட்டுக்கான பங்காக, சுமார் 70,000 லிட்டர் ஹேண்ட் சானிட்டைஷர்களை, தயாரித்து, அரசு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொடுக்க இருக்கிறார்களாம்.
இந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் பகார்டி (Bacardi)-க்குச் சொந்தமான கோ பேக்கிங் ஆலைகள் இருக்கிறதாம். இந்த ஆலையில் ஹேண்ட் சானிட்டைசர்களை உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கிறார்களாம். இதே போல மற்ற மாநிலங்களில் இருக்கும் கோ பேக்கிங் ஆலைகளிலும் ஹேண்ட் சானிட்டைசர்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
பகார்டி தரப்பு
பகார்டி நிறுவனம், எப்போதுமே சிக்கலான நேரங்களில் உதவி செய்தது உண்டு. இப்போது ஹேண்ட் சானிட்டைசர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில், ஹேண்ட் சானிட்டைசர்களை அதிக அளவில் உற்பத்தி செய்தால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வலு சேர்க்க உதவும் என நம்புகிறோம்' எனச் சொல்லி இருக்கிறார் பகார்டி இந்தியாவின் செயல்பாட்டுத் இயக்குநர் (Operations Director) முத்துக் குமார்
சரக்கு நிறுவனங்கள்
ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு சரக்கு நிறுவனங்கள் (சுமார் 150 சரக்கு உற்பத்தி ஆலைகள்) ஹேண்ட் சானிட்டைசர்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களாம். இதை அனைத்து இந்திய டிஸ்டிலரி சங்கமும் உறுதி செய்து இருக்கிறது. இப்படி எல்லோரும் தங்களால் முடிந்ததைக் கொடுக்கும் போது, கொரோனாவை எப்படியும் வென்று விடலாம் என்றே தோன்றுகிறது. வாழ்க மனிதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக