சரியான நேரத்தில் சரியான திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான பலனும் சில நாட்களில் கிடைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
மோசமான சூழ்நிலை கொரோனா பாதிப்பால் ஊழியர்களும் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் உணவுக்கான ஆர்டர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் முடங்கியுள்ளது. இதனால் சோமேட்டோவின் மொத்த வர்த்தகமும் முடங்கியது என்றாலும் மிகையில்லை. இந்த மோசமான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றியுள்ளது சோமேட்டோ.
சோமேட்டோ மார்கெட்
மக்களுக்குத் தற்போது அதிகளவில் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. இந்நிலையில் இதை வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் புதிய சேவையான சோமேட்டோ மார்கெட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
உபர் ஈட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர்ச் சோமேட்டோ பெரிய அளவிலான எவ்விதமான விரிவாக்கமும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
5 மில்லியன் டாலர் முதலீடு
இப்புதிய சேவை அறிமுகத்தின் எதிரொலியாகச் சோமேட்டோ நிறுவனம் புதிதாக 5 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
அப்படியிருந்தும் இப்புதியை சேவை அறிமுகத்தின் வாயிலாகப் பிரிட்டன் முதலீட்டு நிறுவனமான பிசிபிக் ஹாரிசான் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் நிறுவனம் சோமேட்டோவில் முதலீடு செய்துள்ளது. மேலும் இப்புதிய முதலீட்டின் மூலம் சோமேட்டோவின் மொத்த மதிப்பு 3.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஸ்விக்கி இந்நிலையில் சோமேட்டோவின் சக போட்டி நிறுவனமான ஸ்விக்கி தனது உணவு டெலிவரி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை போன்றவற்றை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய 43 மில்லயன் டாலர் முதலீடு செய்துள்ளது.
45 நாட்கள் முன்பு தான் ஸ்விக்கி நேஸ்பர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து சுமார் 113 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாக ஈர்த்து குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக