எஸ்கிலஸ்
பண்டைய கிரேக்கத்தின் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவராக அறியப்பட்ட எஸ்கிலஸ், அவர் எழுதிய புத்தகங்களால் நினைவுகூரப்படுகிறார். அவரது மரணம் சோகம் என்பதைக் காட்டிலும் நகைச்சுவையாகவே வர்ணிக்கப்படுகிறது. எஸ்கிலஸுக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த ஒரு ரோமானிய எழுத்தாளரின் கூற்றுப்படி, கிரேக்க எழுத்தாளர் வானத்திலிருந்து விழுந்த ஆமையால் கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளார். இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் தனது இரைக்காக தூக்கி வந்த ஆமையை அதன் ஓட்டை உடைக்க தூக்கி எறிந்த போது அது எஸ்கிலஸின் வழுக்கைத் தலையில் விழுந்து அவர் இறந்தார்.
கின் ஷி ஹுவாங்
கின் ஷி ஹுவாங் என்ற பெயர் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் சீன மக்களிடையே மரியாதையை எழுப்புகிறது. ஏனென்றால் அவர் சீனாவின் முதல் பேரரசர் மற்றும் அவரது காலத்தின் மிக வெற்றிகரமான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். சக்கரவர்த்தியாக இருக்க விரும்பாதவர் யார்? கின் ஷி ஹுவாங் அதை மிகவும் விரும்பினார், அவர் எப்போதும் பேரரசராக இருக்க விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக மந்திரி ஒருவர் கொடுமையான பாதரச விஷத்தை குடித்தால் மரணமில்லா வாழ்க்கையை அடையலாம் என்று கூறியதை நம்பி இவர் அதனை குடித்தார். அதன் விளைவு வேடிக்கையான மரணத்தை அடைந்தவர்களின் பட்டியலில் இணைந்ததுதான்.
ஹங்கேரியின் பெலா I
ஹங்கேரியில் பல வெளிமதங்கள் நுழைவதை தடுக்க காரணமாக இருந்தவர்முதலாம் பேலா. அதற்காக இப்போதும் அவர் அந்த நாட்டில் கொண்டாடப்படுகிறார். ஆனால் இவர் பல மதங்களை தடுத்தது சுவாரஸ்யமானதல்ல, இவரின் மரணம்தான் சுவாரஸ்யமானது. அவரது ஆடம்பரமான சிம்மாசனம் உடைந்து அடியில் விழுந்தது இதில் காயமுற்ற அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜார்ஜ் பிளாண்டஜெனெட்
இவரது மரணத்தை இவரே தேர்ந்தெடுத்தார் என்றுதான் கூறவேண்டும். ரோஸஸ் இனத்தவருடனான போரில் தோற்ற பிறகு, ஜார்ஜ் தனது சகோதரர் எட்வர்ட் IV இன் உத்தரவின்படி தூக்கிலிடப்படவிருந்தார்.சகோதர அன்பின் உண்மையான எடுத்துக்காட்டு, எட்வர்ட் அவர் கொல்லப்படுவதற்கான வழியைத் தேர்வுசெய்ய அனுமதித்தார். ஜார்ஜ் தனது மரணம் இனிமையானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதனால் தலை துண்டிக்கப்பட்டு இறப்பதற்குப் பதிலாக ஜார்ஜ் பிளாண்டஜெனெட் தனக்கு பிடித்த மதுவான மால்வாசியாவின் பீப்பாயில் மூழ்கித் மரணத்தை தழுவ முடிவு செய்தார்.
ஹான்ஸ் ஸ்டீனிங்கர்
இன்றைய ஆஸ்திரியாவில் உள்ள ஒரு நகரத்தின் பர்கோமாஸ்டர், அதாவது மேயராக ஹான்ஸ் ஸ்டீனிங்கர் இருந்தார். அவர் தனது நகரத்திற்காக என்ன செய்தார் என்பதால் அவர் நினைவிகூறப்படவில்லை, மாறாக அவரின் மரணம்தான் அவரின் பெயரை நிலைப்பெற செய்தது. கீழே விழுந்ததில் அவர் கழுத்து முறிந்து இறந்தார், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் கீழே விழுந்து கழுத்து உடைய காரணமாக இருந்தது அவரின் 4.5 அடி தாடியாகும்.
டான்சிங் பிளேக்
ஆஸ்திரியாவில் 1518 ஆம் ஆண்டு ஏற்பட்ட நடன தொற்றுநோய்க்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் இது 400 க்கும் மேற்பட்டவர்களை பாதித்தது. சில நிமிடங்கள் ஓய்வுகளுடன் இவர்கள் மாதம் முழுவதும் நடனமாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு தீவிரமான நடனம் யாருக்குமே நல்லதல்ல, பக்கவாதம், மாரடைப்பு அல்லது சோர்வு காரணமாக சுமார் 30 பேர் இறந்தனர்.
கிளெமென்ட் வெல்லண்டிகம்
கிளெமென்ட் 19 ஆம் நூற்றாண்டின் வழக்கறிஞராக இருந்தார், அவர் தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை தனது கட்சிக்காரரை காப்பாற்ற இவர் விபரீதமான ஒரு சோதனையை செய்தார். துப்பாக்கியை கையாளும்போது கொலைசெய்யப்பட்டவர் எப்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்க இவர் அதையே முயற்சி செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய மூளையிலேயே சுட்டுக்கொண்டார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு அவரது கட்சிக்காரர் அதற்கு பின் விடுவிக்கப்பட்டார்.
சர்க்கரைப்பாகு வெள்ளம்
பாஸ்டன் சர்க்கரைப்பாகு பேரழிவு ஏற்பட்ட 1919 இல் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சோகத்திற்கு என்ன காரணம் என்பதற்கான துப்பு அதன் பெயரில் உள்ளது. ஒரு சேமிப்பு தொட்டி வெடித்தபோது, போஸ்டனின் தெருக்களில் 35 மைல் (மணிக்கு 56 கிமீ) வேகத்தில் விரைந்து செல்லும் சர்க்கரைப்பாகில் மக்கள் மூழ்கினர். இந்த சோகமான சம்பவத்தை பாட்டுகளாகவும், நாட்டுப்புற கதைகளாகவும் இன்றும் அந்த வட்டாரங்களில் கேட்கலாம்.
ராபர்ட் வில்லியம்ஸ்
உலகின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றில் 1979 ஆம் ஆண்டு ஒரு துர்சம்பவம் நிகழ்ந்தது. கார் உற்பத்தியில் முன்னோடியான இந்த நிறுவனம் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பெயர் பிடித்தது. ஊழியர்களில் ஒருவர் ரோபோவால் கொல்லப்பட்ட முதல் நிறுவனமாக இது அமைந்தது. ஒரு டன் கனமான ரோபோவின் கைகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் ராபர்ட் வில்லியம்ஸ் இறந்தார்.
வி. காமராஜ்
நேஷனல் ஜியாகரஃபிக் அறிக்கையின் படி விண்கல்லால் ஒருவர் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகும். ஆனால் 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்த ஆய்வறிக்கை பொய்யானது. இந்திய பஸ் டிரைவரான காமராஜ் ஒரு விண்கல் மூலம் கொல்லப்பட்ட முதல் மனிதர் ஆனார். அவர் ஓட்டி வந்த பேருந்தில் வானத்திலிருந்து வந்த ஒரு பாறை மோதியதில் அவர் கொல்லப்பட்டார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். விண்கல்லால் கொல்லப்பட்ட முதல் ஆளாக நிச்சயம் இவர் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் பதிவு செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான். ஆனால் நாசா இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக