Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சீன மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான உணவுகள்!


பொதுவாக உலகெங்கிலும் அசைவ உணவுகள் மக்களால் விரும்பி சாப்பிடக்கூடியவையே. உலகில் மற்ற பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகள் என்றால் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், இறான், நண்டு போன்றவற்றை தான் அதிகம் சாப்பிடுவார்கள். உலகிலேயே சீனாவில் தான் பலவிதமான புதுமையான உணவுகள் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. அதிலும் சீன மக்கள் விரும்பி சாப்பிடும் சில உணவுகளானது விசித்திரமானதாக இருக்கும்.

சீனாவில் விற்கப்படும் இந்த விசித்திர உணவுகளின் பட்டியலைக் கேட்டால், பலரும் முகம் சுளிப்பீர்கள். அந்த அளவில் நாம் நினைத்துப் பார்க்காத உணவுகளை சீன மக்கள் சாப்பிடுகிறார்கள். நீங்கள் உணவுப் பிரியராக இருந்து, புதுமையான மற்றும் விசித்திரமான உணவுகளை சுவைக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சீனாவில் விற்கப்படும் உணவுகளை சுவையுங்கள். இந்த உணவுகள் நிச்சயம் உங்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்.

சரி, இப்போது சீனாவில் விற்கப்படும் டாப் 10 விசித்திரமான உணவுகள் எவையென்று காண்போம்...

செம்மறி ஆட்டின் ஆண்குறி

ஆம், சீனாவில் செம்மறி ஆட்டின் ஆண்குறியானது ஒரு குச்சியில் சொருகப்பட்டு, க்ரில் செய்து, சூடாக பரிமாறப்படுகிறது.

டுனா கண்விழி

டுனா கண்விழி ஸ்குவிட் போன்ற சுவையைக் கொண்டிருக்கும். இந்த மீனின் கண்விழி தசைகள் மற்றும் மீன் கொழுப்பு சூழப்பட்டு பரிமாறப்படும். முக்கியமாக கண்விழியானது நன்கு வேக வைக்கப்பட்டு, சுவைப்பொருட்கள் தூவி பரிமாறப்படுகிறது.

பறவைக்கூடு சூப்

ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது தான் இந்த சூப். இந்த பறவைக்கூட்டின் சிறப்பே, இந்த பறவை தனது கூட்டை தன் சொந்த உமிழ்நீரில் இருந்து உருவாக்குகிறது. இந்த பறவையின் உமிழ்நீர் காற்றில் வெளிப்படும் போது கடினமாகிறது. இந்த பறவைக்கூடு சூப் தயாரிக்கும் போது, இதன் சுவையை மேலும் கூட்டுவதற்கு சிக்கன் சூப் சேர்க்கப்படுகிறது.

சிக்கன் விதைப்பை

ஹாங்காங்கில் உள்ள பல ஹோட்டல்களின் மெனுக்களில் சிக்கன் விதைப்பை காண்பிக்கப்படுகின்றன. சிக்கனின் விதைப்பைகள் ஒரு பெரிய வெள்ளை பீன்ஸ் போன்று தோற்றமளிக்கின்றன. இந்த சிக்கன் விதைப்பையானது வேக வைத்தோ அல்லது வறுத்தெடுத்தோ, விருப்பமான சாதம் அல்லது நூடுல்ஸ் மற்றும் குழம்புடன் பரிமாறப்படுகின்றன.

பாலுட்

பாலுட் என்பது வளரும் வாத்து கரு முட்டை ஆகும். இது ஓட்டுடன் வேக வைக்கப்பட்டு உண்ணப்படுகிறது. சீன மக்களுக்கு இது மிகவும் பிடித்தமான உணவு என்று கூறப்படுகிறது. இந்த முட்டையின் சிறப்பு, இதன் நுனிப்பகுதியை துளையிட்டு, உள்ளே இருக்கும் திரவத்தைப் பருகும் போது அற்புதமாக இருக்குமாம். பாலுட் சீனாவில் மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற பிற நாடுகளிலும் பொதுவான உணவாகும்.

தேள்

சீனாவில் தேள் ஃப்ரை மிகவும் பிரபலமானது. தேளானது குச்சியில் சொருகு நன்கு வறுத்தெடுத்து, உப்பு, மிளகாய்த் தூள் தூவி விற்கப்படுகிறது. இது மிகவும் அற்புதமான சுவையில் இருக்குமாம்.

ஆயிரம் வயதுடைய முட்டை

சுண்ணாம்பு, சாம்பல் மற்றும் மண் ஆகியவற்றால் பூசப்பட்ட வாத்து முட்டைகள், அதன் மஞ்சள் கரு பச்சை நிறமாகவும், வெள்ளைக்கரு அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை 100 நாட்கள் உப்பு நீரில் ஊற வைக்கப்படுகிறது. இந்த முட்டைகள் ஒரு வலுவான வாசனையுடன் ஒரு கிரீமி சீஸ் சுவை கொண்டவையாக இருக்கும்.

பாம்பு சூப்

ஹாங்காங்கில் குளிர்காலத்தில் சாப்பிடப்படும் ஒரு பொதுவான உணவுப் பொருள் தான் பாம்பு சூப். இந்த சூப்பில் துண்டாக்கப்பட்ட பாம்பு சேர்த்து பரிமாறப்படுகிறது. இதில் உள்ள பாம்பு கறி கோழி சுவையைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

துர்நாற்றமிக்க டோஃபு

பெயரைக் கேட்கும் போது பலரது முகத்தை சுளிக்க வைக்கும் ஒரு விசித்திரமான உணவுப் பொருள் தான் இது. இது ஒரு புளித்த டோஃபு மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த வாசனையைக் கொண்டிருக்கும். இது பார்ப்பதற்கு ப்ளூ சீஸ் போன்றிருக்கும். சொல்லப்போனால் சீஸ் பிடிப்பவர்களுக்கு, இந்த டோஃபு பிடித்தமானதாக இருக்குமாம்.

இந்த உணவானது க்ரில் சிக்கன் போன்று முதலில் பார்க்கும் போது தோன்றும். ஏனெனில் ஒரு முழு பறவையும் ஒரு குச்சியில் மசாலா தடவி சொருகப்பட்டு, வறுத்தெடுத்து பரிமாறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக