Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

கொரோனா வார்டுகள் நிரம்பியதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளிகள்: சென்னையிலும் அமெரிக்கா நிலை

சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 4 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகள் தற்போது முழுமையாக கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன 
 
இந்த இந்த நான்கு மருத்துவமனைகளில் சேர்த்து சுமார் 1700 படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 1,458 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மட்டுமின்றி கொரோனா அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் இருக்கும் சிலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களுக்கு இன்னும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ஒரு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க படுக்கை வசதி இல்லாததால் தற்போது அவர்கள் ஆம்புலன்ஸில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கைகள் தயாராகி உள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் சென்னை வர்த்தக மையம் கட்டிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் 
 
இதேபோல் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் கொரோனா வார்டூகளாக மாற்ற திட்டமிட்டிருப்பதால் நோயாளிகள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களை திருமண மண்டபத்தில் அமைக்கும் கொரோனா வார்டுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யபப்டும் என தெரிகிறது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகி அதிகமானவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் மட்டுமே இந்த பிரச்சனை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா வார்டுகள் நிரம்பி ஆம்புலன்ஸில் ஏராளமானோர் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தது போல் தற்போது சென்னையிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக