D2h நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை வெறும் 1 ரூபாயில் வழங்கி அசதியுள்ளது. டிஷ் டிவி நிறுவனத்தின் டி.டி.எச் பிராண்டான D2h தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஊரடங்கின்போது பல அற்புதமான சலுகைகள் மற்றும் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வந்தது. அந்த வரிசையில் தற்பொழுது மீண்டும் D2h புதிய சலுகை விபரங்களை வெளியிட்டுள்ளது.
ரம்ஜான் முபாரக் சலுகை
டி2ஹெச் ரம்ஜான் தொடர்பான கன்டென்ட்களை இயக்கும் சேனல் 785 இல் இலவச ‘ரம்ஜான் முபாரக்' நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ‘ஸ்பெஷல் ரம்ஜான் காம்போ' திட்டமும் கிடைக்கிறது, இது சந்தாதாரர்கள் பிராந்திய செய்தி சேனல்களுடன் ஆன்மீக இஸ்லாமிய சேனல்களை ரூ.78.60 என்கிற ரீசார்ஜ் மூலம் பார்க்க அனுமதிக்கிறது.
இஸ்லாமிய ஆன்மீக சேவை - Ibadat Active
இந்த சலுகையைப் பெறப் பயனர்கள் எளிய முறையில் ஒரு மிஸ்டு கால் மூலம் ஆக்டிவ் செய்யலாம் அல்லது ஒரே ஓரு மிஸ்டு கால் மூலம் டிஆக்டிவேட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மற்றொரு ரம்ஜான் சலுகை நன்மையாக நிறுவனம் அதன் இஸ்லாமிய ஆன்மீக சேவையான Ibadat Active-ஐ முதல் மாதத்திற்கு வெறும் ரூபாய் 1-க்கு வழங்குகிறது. இது சேனல் எண் 786 இல் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
ரூ.10 கேஷ்பேக் சலுகை
இத்துடன் D2h நிறுவனத்தின் 'Friends and Family Recharge' ஆனது எந்தவொரு d2h வாடிக்கையாளருக்கும் d2h வலைத்தளம் வழியாகவோ அல்லது d2h இன்பினிட்டி ஆப் வழியாகவோ கிடைக்கிறது. D2h பயனர்கள் அந்தந்த RTN கள் / வாடிக்கையாளர் ஐடிகளைப் பயன்படுத்தி வேறு எந்த d2h வாடிக்கையாளருக்கும் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இந்த சலுகையின் ஒரு பகுதியாக ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.10 கேஷ்பேக்காக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீசார்ஜ் கிரெடிட் நன்மை
ரீசார்ஜ் கிரெடிட் நன்மை
டி.டி.எச் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் ‘யூ ப்ராமிஸ் வி ரெஸ்யூம்' திட்டம், இது வாடிக்கையாளர்களுக்கு மாதம் வெறும் ரூ.10 கட்டண விலையில் ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்ட ரீசார்ஜ் கிரெடிட் நன்மையை வழங்குகிறது.
பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!
முதல் மாதத்திற்கு ரூ.1 மட்டுமே
கூடுதலாக, d2h நிறுவன அதன் கன்டென்ட்-ரிச் சேவைகளான - ஃபிட்னஸ் ஆக்டிவ், டான்ஸ் ஆக்டிவ், த்ரில்லர் ஆக்டிவ், எவர்க்ரீன் கிளாசிக் ஆக்டிவ், காமெடி ஆக்டிவ், கிட்ஸ் ஆக்டிவ் போன்றவைகளை - முதல் மாதத்திற்கு ரூ.1 க்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக