Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

நீட் தேர்வின் புதிய தேதி குறித்த தகவல்

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மே 3ஆம் தேதியான இன்று நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வுக்கான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை.
 
இந்த நிலையில்  நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான புதிய தேதிகள் குறித்த தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதன்படி  நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான புதிய தேதிகள் வரும் மே.5 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்தால் அனேகமாக நீட் மற்றும் JEE தேர்வுகள் மே இறுதியில் அல்லது ஜூன் மாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக