ஜனவரி தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இன்று மகிழ்சியான ஒரு செய்தி... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு "பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பு" திட்டத்தின் கீழ் ஊரடங்கு நெருக்கடியில் உள்ள ஏழை மக்களுக்கு நிதி உதவி நிவாரணங்கள் வழங்கப்படும் எனக்கூறி, நிதித்தொகுப்பை ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ. 500 செலுத்தப்பட்டது. இன்று இரண்டாவது தவணையாக ரூ .500 பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய நிதி சேவைச் செயலாளர் டெபாஷிஷ் பாண்டா, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனாவின் கீழ் அனுப்பப்படவுள்ள ரூ .500 உதவித் தொகை குறித்து ட்வீட் செய்து தகவல்களை வழங்யுள்ளார்.
எந்த தேதியில் ஜன தன் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்:
பெண்கள் தங்கள் கணக்கின் கடைசி இலக்கத்தை சரிபார்த்து, அதற்கேற்ப பணத்தை திரும்பப் பெற வங்கிக்குச் செல்ல வேண்டும். கால அட்டவணையின்படி, இந்த தொகை இன்று [மே 4, 2020] ஜன் தன் வங்கிக் கணக்குகளில் கடைசி எண் (இலக்கு) 0 மற்றும் 1 உள்ள பெண்களின் கணக்கில் வரும்.
இதேபோல், ஜன தன் கணக்கின் கடைசி எண் 2 மற்றும் 3 இலக்குகளை கொண்டவர்களுக்கு மே 5 ஆம் தேதியும், கடைசி எண் 4 மற்றும் 5 கொண்டவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், 6 மற்றும் 7 இலக்க கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மே 8 ஆம் தேதியும், 8 மற்றும் 9 இலக்க கணக்குகளுக்கு மே 11 ஆம் தேதியும் வழங்கப்படுகின்றன. ரூ .500 தவணை முறையில் பணம் செலுத்துதல் டிபிடி மூலம் செய்யப்படும்
இது தவிர, மே 11-க்குப் பிறகு, எந்தவொரு நாளிலும் மத்திய அரசாங்கம் வழங்கிய 500 ரூபாயின் பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம்.
ஜன தன் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது எங்கே?
உங்கள் வங்கி, சிஎஸ்பி [CSP], ஏடிஎம் [ATM], சிஎஸ்சி [CSC] மூலம் இந்த தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக