கிழங்கு வகைகள் குழம்பாக வைத்து சாப்பிடுவது மிகவும் ருசிகரமான உணவு தான். ஆனால், இதில் சிலருக்கு சேப்பங்கிழங்கை எவ்வாறு குழம்பு வைப்பது என்பது சரியாக தெரியவில்லை. வாருங்கள் பாப்போம்.
தேவையான பொருள்கள்
- சேப்பங்கிழங்கு
- ஓமம்
- கடுகு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் சேப்பக்கிழங்கை அவியவைத்து தோலுரித்து கொள்ளவும். அதன் பிறகு அந்த கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் ஒமம் போட்டு பொரியவிட்டு, பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும். பின்பு, தனியா தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு குழம்பு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக