ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல்
முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய வசதி டுயோ செயலியில் 'ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்' (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலில் மொபைல் நம்பர் இன்றி அழைப்புகள் மேற்கொள்ள முடியும், மேலும் இதே சேவை கூகுள் டுயோ வலைதள பதிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்றும், சமீப காலங்களில் இந்த சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கூகுள் டுயோ செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ்-அக்கவுண்ட் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது,மேலும் இந்த அம்சம் மற்ற பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. ஆனால்
இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன்னதாக கூகுள் டுயோ வலைதள பதிப்பில் இந்த சேவை ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. புதிய புதிய சேவையில் மின்னஞ்சல் முகவரி கொண்டே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். எனினும், மொபைல் நம்பர் லிண்க் செய்யப்படாத அக்கவுண்ட்கள் காண்டாக்ட் பட்டியலில் காண்பிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் வசதி எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக