ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் கேமரா வசதிகள், பேட்டரி பேக் அப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளது அதுகுறித்து பார்க்கலாம்.
சீனாவை தளமாகக் கொண்ட ஒன்பிளஸ்
சீனாவை தளமாகக் கொண்ட ஒன்பிளஸ் ஏற்கனவே அதன் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் தங்களுக்கென தனி இடத்தை ஒன்பிளஸ் பிடித்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்த ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்களை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது மற்றொரு புதிய மாடலான நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ்
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் 8 லைட்டை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை அதன் ஆன்லைன் லைவ் புரோகிராம் மூலமாக வெளியிட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 சீரிஸ்இந்த ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் 7 சீரிஸில் மேம்படுத்தப்பட்டதாகும், மேலும் இது சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் இப்போது அன்னோடனின் கட்டுரையின் படி பார்க்கலாம்.
டாப்-எண்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்
புதிய டாப்-எண்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனானது, இப்போது 90 ஹெர்ட்ஸ் அல்லது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களோடு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் கசிவு தரவுகளின்படி, ஒன்பிளஸ் 8 லைட் அல்லது ஒன்பிளஸ் இசட், 6.4 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு வரும் என தெரிகிறது.
90Hz அல்லது 120Hz திறன்
இந்த ஸ்மார்ட்போனில் 'ஸ்டாண்டர்ட்' 60 ஹெர்ட்ஸ் வசதி இருக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், 90Hz அல்லது 120Hz திறன் கொண்ட காட்சியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இது மெனுக்கள் அல்லது ஸ்க்ரோலிங் இடையே ஸ்வைப் செய்வதற்கான வசதியும் இருக்கும் என தெரிகிறது.
Android 10 மூலம் இயக்கப்படுகிறது
ஒன்பிளஸ் 8 லைட் அல்லது ஒன் பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் மீடியா டெக் 1000 சிப்செட் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது Android 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் சேமிப்பு திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கூடுதலாக, மெமரி கார்டின் சேமிப்பு திறன் விரிவாக்கப்படலாம் அல்லது இல்லையா என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
கேமரா வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 16 மெகாபிக்சல் சென்சார், மூன்றாவது கேமரா 12 மெகாபிக்சல் சென்சார் ஆகும். இதில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இடம்பெறும். அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் வசதி உள்ளது.
பேட்டரி மற்றும் பிற
ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வசதி உள்ளது. மேலும் இணைப்பு விருப்பங்களில் ஹாட்ஸ்பாட், புளூடூத், வைஃபை போன்றவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 5ஜியை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. 5 ஜி ஆதரவோடு வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த தகவலும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக