இந்த சிம்பிள் வழி மூலம் நல்ல முன்னேற்றத்தை காணலாம். இதில் 3 வகையான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். ஆமணக்கு, ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒன்றாக கலந்து உங்க குதிகால் மற்றும் பாதங்கள் முழுவதும் மசாஜ் செய்யுங்கள். பிறகு பெட்ரோலியம் ஜெல் அல்லது வாசலினை தடவிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பு இதைச் செய்து விட்டு காலில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் உங்க பாதங்களில் எண்ணெய் நன்றாக உறிஞ்சப்பட்டு குதிகால் வெடிப்புக்கு உதவியாக இருக்கும். பாதமும் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.
வாழைப்பழம் மற்றும் தேன் கலவை
ஒரு பாத்திரத்தில் ஒரு சிறிய வாழைப்பழத்தை பிசைந்து கொண்டு அதில் 1 டீ ஸ்பூன் தேன் சேர்க்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை பாதங்கள் முழுவதும் தடவி மெதுவாக தேய்க்கவும். 20 - 30 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு தண்ணீரில் கழுவுங்கள். பிறகு பாதங்களை உலர்த்திய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். வாழைப்பழமே உங்களுக்கு ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக அமையும். இதில் பாத சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் பி 6 போன்றவை காணப்படுகிறது. தேன் சருமத்தின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு வெளிப்புற சருமத்தையும் ஈரப்பதமாக்குகிறது.
பியூமிஸ் கல்லுடன் உப்பை சேர்த்து தேயுங்கள்
இது உங்க பாத வெடிப்புக்கான எளிய தீர்வாகும். உப்பு மற்றும் பியூமிஸ் கல் பாதங்களில் சிறப்பாக செயல்படும். உங்களிடம் பியூமிஸ் கல் இல்லையென்றால் உங்க லூஃபாவை மாற்றாக பயன்படுத்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை எடுத்து அதை ஆலிவ் எண்ணெய்யில் கலக்கவும். இந்த கலவையை பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி பியூமிஸ் கல்லை கொண்டு மெதுவாக தேயுங்கள். ரொம்ப அழுத்தி தேய்க்காதீர்கள். ஏனென்றால் குதிகாலில் கீறல் ஏற்பட வாய்ப்புள்ளது. 20 - 30 விநாடிகள் கழித்து ஒரு துண்டைக் கொண்டு துடையுங்கள். பிறகு சோப்பு நீரில் கழுவிக் கொள்ளுங்கள். உங்க கால்களை உலர்த்திய பிறகு மாய்ஸ்சரைசர் க்ரீம்களை அப்ளே செய்து கொள்ளுங்கள்.
தேங்காய்ண்ணெய்
வறண்ட சருமம், தடிப்பு தோல் அழற்சி போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெய்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்க சரும ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். தேங்காய் எண்ணெய்யை பாதங்களில் தடவி நன்றாக ஊற வையுங்கள். தேங்காய் எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பாதங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, வறண்ட சருமம் அல்லது தொற்றுநோய்களை போக்க உதவியாக இருக்கும்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
பாதவெடிப்பு மிகத் தீவிரமாக இருந்தால் அதை குணப்படுத்த நீங்களே சிகிச்சை மேற்கொள்ளாதீர்கள். அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு கால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. அவர் உங்கள் பாத வெடிப்பிற்கு ஏற்ற சிறந்த சிகிச்சையை வழங்குவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக