தண்ணீர் குடிக்கும் போது டம்ளரை வாயில் வைத்து தான் உறிஞ்ச வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் குளிர்ந்த ஐஸ் வாட்டரை சிலர் அண்ணாந்து நேராக வாய்க்குள் ஊற்றி குடிக்கும் போது அவை நேரடியாக தொண்டைபகுதிக்கு செல்லும். குளிர்ந்த நீர் தொண்டையை மோசமாக்கும். அதிகப்படியான குளிர்ந்த நீரை அவ்வபோது குடித்துவருவதால் தான் தொண்டையில் டான்சில்ஸ் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். தொண்டையில் தொற்று இருந்தால் அவை நோய்களை உருவாக்கும்.
தற்போது கொரோனா பெருந்தொற்று இருக்கும் நிலையில் மருத்துவர்கள் மிதமான வெந்நீரை எப்போதும் குடித்துவருவதன் மூலம் தொண்டையில் இருக்கும் தொற்று நுரையீரல் வரை அண்டவிடாமல் செய்யும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். பொதுவாகவே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து அருந்தும் கூல் வாட்டர் தொண்டையில் கரகரப்பை உண்டாக்ககூடியவை என்பதை மறந்துவிட வேண்டாம். தொடர்ந்து கூல் வாட்டர் குடித்து வருபவர்கள் இளமை காலத்தில் இல்லையென்றாலும் வயதான பிறகு சுவாசப்பாதையில் இருக்கும் சதைப்பகுதி பாதிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு.
உண்ணும் உணவில் இருக்கும் சத்துகள் எளிதில் செரிமானம் ஆனால் தான் உடலானது அதில் இருக்கும் சத்துகளை உறிஞ்சு கொள்ள முடியும். ஆனால் உணவுக்கு பிறகு கூல் வாட்டர் குடிக்கும் போது உணவில் இருக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்பு படிவங்கள் ரத்த நாளாங்களில் படிந்து தேங்கிவிடுவதால் செரிமானக்கோளாறுகள் உண்டாகிறது. இதனால் சத்தான உணவை உட்கொண்டாலும் உடலானது உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சு கொள்வதில் சிக்கலாகிறது. அதிகப்படியாக கொழுப்புகள் படிந்து ரத்த நாளங்களில் தேங்கிவிடும்போது இதயத்தை எளிதாக பாதிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் எளிதாக பற்றுகிறது.
நீர்ச்சத்து குறைபாடு
மடக் மடக் என்று மொத்த பாட்டிலை காலி செய்தாலும் கூட கூல் வாட்டரால் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை ஈடு செய்ய முடியாது. உடலின் வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலை கொண்ட பொருளை உள்ளுக்கு எடுத்துகொள்ளும் போது உடல் வெப்ப நிலை சீராக வைக்க அதிக ஆற்றலை செலவிட வேண்டியிருக்கிறது. இதனால் உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துகள் ஆற்றலாக மாறி உடல் ஆற்றல் இழப்பை அதிகரித்துவிடுகிறது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் கூட உடல் ஆற்றல் இழப்பு உண்டாவதை தடுக்க முடியாது. உடல் நீரிழிப்பும் தடுக்க முடியாது. இதை உங்களுக்கு உண்டாகும் சோர்வு மூலம் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிக உடல் எடையால் அவதிப்படுகிறார்கள். தொடர்ந்து ஐஸ் வாட்டர் குடிக்கும் போது அவை உணவில் இருக்கும் கொழுப்பை கடினமாக்குகிறது. இதனால் கொழுப்பு கரையாமல் ஆங்காங்கே உறுப்புகளில் சென்று தேங்கிவிடுகிறது. இதனால் கொழுப்பு எரிக்கப்படுவது தடுக்கப்பட்டு உடல் எடை வேகமாக கூடுகிறது.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கடுமையான டயட், உடற்பயிற்சி என்று பின்பற்றினாலும் குடிக்க ஐஸ் வாட்டர் பயன்படுத்தும் போது உடல் எடை குறைவதற்கு வாய்ப்பே கிடையாது.உடல் எடையால் கடுமையான உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் நிலையில் உடல் எடையை அதிகரிக்கும் காரணங்களில் இவையும் ஒன்றாக இருக்கிறது.
உண்ணும் உணவில் இருக்கும் சத்து செரிமானம் ஆக செரிமான நீர் சுரப்பு அவசியம். ஆனால் செரிமானக்கோளாறுகள் இருக்கும் போது வயிறு கோளாறுகள் உண்டாகும்.இவை சங்கிலித்தொடர் போன்று குடல் இயக்கங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி அதன் பணியை தாமதமாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளாவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
தற்காலிகமாக புத்துணர்ச்சி தரும் கூல் வாட்டர் அப்போதைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடல் பல ஆரோக்கிய குறைபாடுகளை சந்திக்கிறது என்பதைதான் ஆய்வுகளும் அறிவுறுத்துகிறது. அப்படியெனில் கோடையில் என்ன செய்வது என்பவர்கள் நம் முன்னோர்கள் வழியை பின்பற்ற வேண்டியது தான். மண் பானை தண்ணீர்.. உடலுக்கும் நாவுக்கும் பக்கவிளைவில்லாமல் குளிர்ச்சிதரக்கூடியது. இதை கடைபிடித்தாலே போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக