இத்தனை நாட்கள் வீட்டிலேயே அடைபட்டு கிடந்த மக்கள் வெளியே வந்தவுடன் கட்டுப்பாடின்றி செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம், பழிச் செலவு (revenge spending) என அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக ஷாப்பிங் செய்யாமல் அடைந்துகிடந்தபின், வெளியே அனுமதிக்கப்பட்டால் அளவுக்கு அதிகமாக செலவுகளை மேற்கொண்டு பொருட்களை வாங்கி குவிப்பார்கள். அதுவும் தங்களுக்கு விருப்பமான கடைகளை தேடிச்சென்று ஷாப்பிங் செய்வார்கள்.
இதன்படி சீன நகரங்களிலுள்ள ஆப்பிள், நைக், குக்கி, எஸ்டீ லவுடெர், லான்கோம் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் கடைகளில் நீளமான வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்து பொருட்களை வாங்குவதால் வியாபாரம் மிக ஜோராக நடைபெறுகிறது.
சீன மக்களை பிடித்திருக்கும் இந்தப் புதிய பழக்கம் இந்திய மக்களுக்கும் வருமா? இதுகுறித்து பெய்ன் & கம்பெனி நிறுவனத்தின் பங்குதாரர் நிகில் பிரசாத் ஓஜா எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இந்திய சந்தையில் மதிப்புக்கு மவுசு இருக்கும். மக்கள் விலை குறைவான பொருட்களை தேடிச் செல்வார்கள். மறுபுறம், அதிக வருமானம் பெறும் குடும்பங்கள் அதிக செலவுகளை செய்து பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அல்வரெஸ் & மர்சால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிதின் ஜெயின் பேசுகையில், “இந்திய நுகர்வோரை சீன நுகர்வோருடன் ஒப்பிட முடியாது. இந்தியாவில் விற்பனை பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக