சத்தான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று தான் கருத்தரித்த நாள் முதல் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் கர்ப்பிணிகள் உண்ணும் உணவை கர்ப்பிணிகளோடு கருவில் இருக்கும் குழந்தையும் சுவைக்க தொடங்கிவிடுகிறது. வயிற்றில் இருக்கும் போதே குழந்தைக்கு சுவை உணர்வு தெரிந்து விடுவது ஆச்சரியமான விஷயம் தான்.
கர்ப்பிணிகள் வாய்க்கு நன்றாக இருக்கிறதே என்று அதிக கார உணவை எடுத்துகொள்வார்கள். ஆனால் கார உணவு பெரும்பாலும் குழந்தைக்கு பிடிப்பதில்லை. அதனால் தான் மிதமிஞ்சிய காரத்தை பேறுகாலம் முழுவதும் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.
பயணங்களின் போது
பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்கிறார்கள். கர்ப்பக்காலத்தில் பணிக்கு செல்லும் போதும், வெளியூர் பயணங்களின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களால் நம் உடல் மேலும் சோர்வடையும். குறிப்பாக இரு சக்கர வாகங்களில் பயணிக்கும் போது குலுக்கலும், நெரிசலும், மேடும் பள்ளமும் கொண்டிருக்கும் சாலை பயணத்தில் உண்டாகும் அசெளகரியம் நமக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கும் உண்டாகும். அதனால் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் பொறுமையாக பயணம் செய்வது மிகவும் நல்லது.
உறக்கத்தின் போது
கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் குப்புறப்படுப்பதில்லை. ஆனால் சிலர் மசக்கையால் படுக்கையில் உருண்டு கொண்டே இருப்பார்கள். படுக்கையில் புரண்டு படுப்பதால் குழந்தை வயிற்றில் உருண்டு கொள்ள நேரிடும். இப்படி குழந்தையை தொல்லை உண்டாக்கும் செயல்களில் முக்கியமானது இப்படி உருண்டு புரண்டு படுப்பது..
அதனால் தான் கர்ப்பக்காலத்தில் இடதுபக்கம் படுக்க வேண்டும். அதே போன்று மல்லாந்து, குப்புறப்படுத்து தூங்க கூடாது. திரும்பி படுப்பதாக இருந்தால் எழுந்து உட்கார்ந்து பிறகு இந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும்.
கர்ப்ப்பிணியின் மனநிலை பேறுகாலம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது கர்ப்பிணி பெண் அழுதால் அது வயிற்றில் இருக்கும் கருவையும் அதன் மனநிலையிலும் பாதிப்பை உண்டாக்கும்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி கருத்தரித்த பெண்ணின் மனநிலையையும் பொறுத்து இருக்கிறது. பேறுகாலம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் சோகத்தையும் பயத்தையும் வளரவிடாமல் அமைதியான மனநிலையை வைத்துகொள்ள வேண்டும்.
காதை பிளக்கும் சத்தத்தால் குழந்தை அதிர்வுக்குள்ளாவதை தாயால் உணரவே முடியும். கர்ப்பிணிகள் சத்தமாக பேசுவதோ, கோபப்படுவதோ, சண்டையிடுவதோ தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். விழாக்கள், பார்ட்டிகள் கலந்துகொண்டாலும் அதிக இரைச்சல் மிகுந்த இடங்களில் நடமாட வேண்டாம். குறிப்பாக கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியால் உண்டாகும் பேரிரைச்சல் குழந்தைக்கு பிடிக்காது. இவை ஒருவித அச்ச உணர்வை குழந்தைக்கு வயிற்றில் தோற்றுவிக்கும்.
வீட்டில் கூட டீவியின் ஒலியை குறைத்துவைப்பதும், சண்டை இரைச்சல் இல்லாமல் இருப்பதும் கவனமானது. அப்படியெனில் குழந்தைக்கு இசை பிடிக்காது என்று அர்த்தம் அல்ல. மிதமான ஒலியில் இசைக்கும் இசையை வயிற்றில் இருக்கும் குழந்தைகள் ஆழ்ந்து அனுபவித்து ரசிக்கவே செய்கின்றன. சொல்லபோனால் அதிக சந்தோஷம் கூட கொள்கின்றன.
கர்ப்பத்தின் இறுதி மூன்றாம் ட்ரைமெஸ்டரில் குழந்தையின் அசைவு வழக்கத்தை விட அதிகரிக்கும். இந்த நேரத்தில் வயிற்றை பார்க்கும் போது குழந்தையின் அசைவை வெளியிலிருந்தும் பார்க்கமுடியும். வயிற்றை மிதமாக மென்மையாக தடவிகொடுத்தா குழந்தை மகிழ்ச்சியாக அசைந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஆனால் ஆர்வக்கோளாறில் குழந்தையின் உடலை அழுத்தும்படி வயிற்றை அழுத்துவதும், குழந்தை உணரும் படி ஒரு விரலால் வயிற்றை அழுத்துவதும் குழந்தைக்கு எரிச்சல் கொடுக்கும். எக்காரணம் கொண்டும் இதை ஊக்குவிக்காமல் இருப்பதுதான் நல்லது.
கர்ப்பத்தின் முதல் மற்றும் இரண்டாம் ட்ரைமெஸ்டரில் உடலுறவு கொள்வதை மருத்துவரின் ஆலோசனையோடு பின்பற்றலாம். ஆனால் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலகட்டத்தில் உடலுறவு கொள்வது குழந்தைக்கு ஒருவித அசெளகரியத்தை உண்டு செய்யும். குழந்தை தூங்கி கொண்டிருக்கலாம். அல்லது கருவில் இங்குமங்கும் உதைத்தபடி மகிழ்ந்துகொண்டிருக்கலாம். இந்நிலையில் உடலுக்கு அதிர்வு தருவது குழந்தைக்கு இடையூறையே உண்டு செய்யும்.
குழந்தைக்கு இந்த சத்து வேண்டும் கர்ப்பிணிக்கு இந்த சத்து வேண்டும். இதை தவிர்க்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறோம். அதே போன்று இவையெல்லாம் குழந்தையை மனதளவில் ஆரோக்கியத்தையும் குறைக்க செய்யும் என்பதையும் உணர்த்து மேற்கண்ட செயலை தவிர்ப்பதுதான் சிறந்தது. ஒவ்வொரு கர்ப்பிணிகளும் இதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக