Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

இந்த நேரம் பார்த்து இப்படியொரு ஆபரா? டெம்ப்ட் ஏற்றும் சாம்சங்!

சாம்சங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் கேலக்ஸி மாடலின் மீது விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்-சீரிஸ் தொடரின் கீழ் உள்ளவொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் இந்திய விலையை குறிப்பதாக அறிவித்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எம் 21 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.13,499 என்கிற ஆரம்ப விலையில் மிட-ரேன்ஜ் பிரிவின் கீழ் அறிமுகம் ஆனது. ஆனால் மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வீத உயர்வுக்குப் பிறகு, இதன் விலை ரூ.14,222 ஆக உயர்த்தப்பட்டது.
இப்போது இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.13,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சரியாக ரூ.1,023 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது.

இந்த விலை பேஸிக் வேரியண்ட் ஆன 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடையது ஆகும், இதன் உண்மையான விலை அல்லது பழைய விலை ரூ.14,222 ஆகும்.


மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடலான 6 ஜிபி + 128 ஜிபி ஆனது ரூ.15,499 ஆக உள்ளது, கடைசியாக இதன் விலை அதிகரித்த போது இது ரூ.16,499 க்கு வாங்க கிடைத்தது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

இந்த புதிய விலைகள் இப்போது சாம்சங் இந்தியாவின் இ-ஸ்டோரில் பிரதிபலிக்கின்றன, மேலும் லாக்டவுன முடிந்ததும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பிற இ-காமர்ஸ் தளங்களில் இந்த மாற்றங்கள் தெரியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

டிஸ்பிளே, ப்ராசஸர் & ரேம்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 கொண்டு இயங்குகிறது.
இது 6.4 இன்ச் அளவிலான முழு எச்டி+ (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை 19.5: 9 என்கிற விகிதத்துடன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கொண்டுள்ளது. 

இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC உடனாக மாலி-ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா & செல்பீ கேமரா:

கேமரத்துறையை பொறுத்தவரை இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதில் 8 மெகாபிக்சல் (123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்) + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் அடக்கம்.

செல்பீக்களைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம் 21 அதன் முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் அளவியலான கேமராவை கொண்டுள்ளது. இதன் செல்பீ கேமரா செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களுடன் செயல்படுகிறது மற்றும் ப்ரீலோலட் ஃபேஸ் அன்லாக் அம்சத்தினை ஆதரிக்கிறது.

மெமரி, கனெக்டிவிட்டி & பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி எம்21 ஆனது 128 ஜிபி வரையிலான இன்டர்னஸ் ஸ்ட்ரோரேஜை கொண்டுள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகிறது.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

மற்ற சென்சார்களை பொறுத்தவரை அக்ஸலரோமீட்டர், அம்பியண்ட் லைட், கைரோ, மேக்னட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த மொத்த அமைப்பும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு 6,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அளவீட்டில் இது 8.9 மிமீ தடிமன் மற்றும் 188 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக