Zomato-வை தொடர்ந்து Swiggy தங்களது நிறுவனத்தில் இருந்து 1,100 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் முழு விவரம் குறித்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 96169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது இதுவரை 36,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகபட்சமான மாநிலம்
கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053 பேருக்கு உள்ளது. அதேபோல் அங்கு 1198 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 11,379 பேருக்கும், தமிழகத்தில் 11,224 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலகின் 212 நாடுகளில் தாக்கம்
கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளை உலுக்கி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.
18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர்
குணமடைந்துள்ளனர்
அதேபோல் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுபவர்களில் 44,800-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் கொரோனா பாதித்தவர்களில் 18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கோரத்தாண்டவம்
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவத் தொடங்கினாலும், இதன் தாக்கம் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கை
இந்த ஊரடங்கு அறிவிப்பால் பல்வேறு நிறுவனங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி சுமார் 8,000 ஊழியர்களைக் கொண்ட ஸ்விகி, தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
1,100 ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக வரும் நாட்களில் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக உணவு விநியோக நிறுவனமாக ஸ்விகி தெரிவித்துள்ளது. 'துரதிர்ஷ்டவசமான குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஸ்விக்கிக்கு இன்று மிகவும் சோகமான நாட்களில் ஒன்றாகும்' என்று ஸ்விகி இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி மே 18(இன்று) தங்களது நிறுவனத்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்
ஸ்விகியின் இந்த நடவடிக்கை, உணவகத் தொகுப்பாளர் சொமேட்டோ தனது பணியாளர்களில் 13 சதவீதம் அதாவது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி
நிறுவனத்தின் மனிதவள குழு அடுத்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை தொடர்பு கொள்ளும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது மூன்று மாத சம்பளத்தை ஸ்விகி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டுத் தொகை நீட்டிப்பு
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் தொகையை 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்விகி கொரோனா தாக்கம் காலத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
செலவுகளை குறைக்கும்படி அறிவுறுத்தல்
மேலும் இந்த தாக்கம் இன்னும் குறுகிய காலத்திற்கு பாதிப்பை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் திட்டமிட்டதை விட சிறிய ஆர்டர் அளவைக் கொண்டு லாபத்தை ஈட்டி ஸ்விகி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் மஜெட்டி கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக