பப்பாளியை வைத்து சுவையான ஐஸ் க்ரானிடா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையானவை
- பப்பாளி
- சர்க்கரை
- இஞ்சி
- எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டவும். பின் ஒரு பாத்திரத்தில் நீர் சர்க்கரை சேர்த்து பாகு செய்து ஆறவைக்கவும்.
சர்க்கரை பாகு ஆறியதும் அதில் பப்பாளி கலவையை சேர்த்து எலுமிச்சை விட்டு நன்றாக கலக்கவும். இதை பிரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து அடித்துவிட்டு மீண்டும் பிரீஸரில் வைக்கவும். தற்பொழுது அட்டகாசமான பப்பாளி க்ரானிடா வீட்டிலேயே தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக