Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மே, 2020

ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லையா? கட்டாயம் என்ற நிலைப்பாட்டை 4-வது லாக்டவுனில் மாற்றிய மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் அரசு, தனியார் ஊழியர்கள் வைத்திருக்க வேண்டும் என்று முன்பு உத்தரவி்ட்ட மத்தியஅரசு, 4-வது கட்ட லாக்டவுன் தொடங்கிய நிலையில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயமி்ல்லை தேவைப்படுவோர், விருப்பமிருந்தால் பயன்படுத்தலாம் என நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

கடந்த 1-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும்தங்களின் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருப்பது கட்டாயம் என்று கூறியது.

குறிப்பாக கரோனா பாதிப்பு இருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசி்க்கும் மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் திடீரென மத்திய அரசு தனது நிலைப்பாடு மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த விளக்கம் ஏதும் இல்லை. ஆரோக்கிய சேது கட்டாயம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் அதன் பலன்களை மட்டும் சொல்லியதோடு நிறுத்திக்கொண்டது குழப்பத்தை அளிக்கிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 3 கட்டங்கள் முடிந்து 4-வது கட்ட லாக்டவுன் இன்று முதல் தொடங்குகிறது. இந்த 4-வது கட்ட லாக்டவுனில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில், ஆரோக்கிய சேது செயலியை அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருப்பவர்கள் கட்டாயம் தங்களின் செல்போனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற வார்த்தையைக் மத்திய அரசு 4-வது கட்ட லாக்டவுன் வழிகாட்டி நெறிமுறையில் கைவி்ட்டுள்ளது.


அதற்கு மாறாக இந்த ஆரோக்கிய சேது வைத்திருந்தால், கரோனா வைரஸ்நோய் தொற்று ஒருவருக்கு பரவ வாய்ப்புஇருக்கிறதா என்பதையும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும்.

அலுவலகம், பணியிடங்கள், போன்றவற்றின் பாதுகாப்புக்காக ஆரோக்கிய சேது செயிலியை அனைத்து ஊழியர்களும் செல்போனில் பதவியேற்றம் செய்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்லாமல் தனிநபர் ஒருவர் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்றம் செய்து சீரான இடைவெளியில் தங்களின் உடல் நலன் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த 1்-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் மாவட்ட நிர்வாகம், உள்ளநாட்சி நிர்வாகம் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருப்போர் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவி்ட்டிருந்தது.ஆனால் 4-வது லாக்டவுன் விதிமுறையில் “கட்டாயமாக” என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்துள்ளது.

இ்ந்த சூழலில் பிரான்ஸைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு வல்லுநர் எலியட் அல்டர்ஸன் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றன. 9 கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்கள் அச்சுறுத்தலில் இருக்கிறது.

என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறீ்ர்களா” எனத் தெரிவித்திருந்தார். ேமலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிட்டும், ஆம் ராகுல்காந்தி கூறியதுசரிதான் இதில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது” எனத் தெரிவித்தார்

ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு, “ கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆரோக்கிய சேது செயலியில் எந்தவிதமான பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. யாருடைய விவரங்களும் திருடப்பட வாய்ப்பில்லை என்று விளக்கம் அளித்ததும் கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக