இந்திய மக்களின் டேட்டா பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சேவைகளின் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெலிகாம் சேவை துறையில் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு அடுத்தடுத்துச் சட்டதிட்டங்களை மாற்றி வருகிறது.
ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான வருமானம் இழந்து தவித்து வரும் இதேவேளையில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் AGR பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் டெலிகாம் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விதி மாற்றத்தால் இனி பிராண்ட்பேன்ட் சேவை கட்டணம் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய அரசுக்கு வருடம் 880 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவால் அதிகளவில் நன்மை அடையப் போவது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும், சுனில் மிட்டல்-ன் ஏர்டெல் நிறுவனம் தான்.
ஆனால் ஜியோ ஹேத்வே போன்ற சிறுகுறு பிராண்ட்பேன்ட் சேவை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதற்கு வழிவிடுமா
இந்தப் புதிய விதி மாற்றத்தால் இனி பிராண்ட்பேன்ட் சேவை கட்டணம் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைசன்ஸ் கட்டணம்
ஹோம் பிராண்ட்பேன்ட் சேவைக்கான லைசன்ஸ் கட்டணத்தை AGR எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்-ல் வருடத்திற்கு வெறும் 1 ரூபாயாகக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. சமீபத்தில் கூட இண்டர்கனெக்ஷன் கட்டணத்தை மத்திய அரசு அதிகளவில் குறைத்த நிலையில் தற்போது நாடு முழுவதும் பிராண்ட்பேன்ட் சேவையின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு லைசன்ஸ் கட்டணத்தை வெறும் 1 ரூபாயாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.
AGRல் 8%
தற்போது நடைமுறையில் பிராண்ட்பேன்ட் சேவைக்காக மத்திய அரசு ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்திடமும் AGR எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்-ல் வருடத்திற்கு 8 சதவீதம் தொகை லைசன்ஸ் கட்டணமாக வசூலிக்கிறது.இதனால் மத்திய அரசுக்கு வருடம் 880 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று வருகிறது.
5000 கோடி ரூபாய்
மத்திய அரசு தற்போது ஆலோசனை செய்வது போல் பிராண்ட்பேன்ட் கட்டணத்திற்கான லைசன்ஸ் கட்டணத்தை AGRல் 8 சதவீதத்தில் இருந்து வெரும் 1 ரூபாயாகக் குறைத்துவிட்டால் மத்திய அரசுக்கு அடுத்த 5 வருடத்தில் கிட்டதட்ட 5000 கோடி ரூபாய் நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்பாட்
மத்திய அரசு தற்போது அறிவிக்க உள்ள 1 ரூபாய் கட்டணத்தில் மூலம் தனியார் மற்றும் அரசு டெலிகாம் நிறுவனங்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் ஹோம் பிராண்ட்பேன்ட் சேவை கொடுக்க முடியும். இதனால் நாட்டில் பிராண்ட்பேன்ட் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் பல மடங்க உயரவும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவால் அதிகளவில் நன்மை அடையப் போவது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும், சுனில் மிட்டல்-ன் ஏர்டெல் நிறுவனம் தான்.
26 சதவீத சந்தை
இந்தியாவில் ஹோம் பிராண்ட்பேன்ட் சேவை சந்தையில் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் 26 சதவீத சந்தையை வைத்துள்ளது. இத்துறை சேவையை ஏர்டெல் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், ஜியோ கடந்த வருடம் தான் ஜியோ பைபர் திட்டத்தின் மூலம் களத்தில் இறங்கியது.ஆனால் ஜியோ ஹேத்வே போன்ற சிறுகுறு பிராண்ட்பேன்ட் சேவை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ
டெலிகாம் சேவையை மிகவும் குறைந்த விலையில் கட்டணத்தைச் சேவை அளிப்பதன் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பிடித் முகேஷ் அம்பானியின் ஜியோ. தற்போது மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் பிராண்ட்பேன்ட் சேவையிலும் பெரிய அளவிலான ஆதிக்கத்தை அடையப் போகிறார்.
59 சதவீத சந்தை
பிராண்ட்பேன்ட் சேவை பிரிவில் அரசு நிறுவனங்களான BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் சுமார் 59 சதவீத வர்த்தகத்தைத் தன் வசம் வைத்துள்ளது. தற்போது அறிவிக்கப்படும் சலுகையின் மூலம் அரசு டெலிகாம் நிறுவனங்கள் பயன்படுத்த அதிகளவில் வர்த்தகத்தைப் பெறவும் வாய்ப்பு உள்ளது.ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதற்கு வழிவிடுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக