>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 24 ஜூன், 2020

    லாக்டவுனில் 2 லட்ச கணக்குகளைத் திறந்த பினோ பேமெண்ட்ஸ் வங்கி..!

    கொரோனா-வால் ஏற்பட்ட லாக்டவுனில் அனைத்து வர்த்தகமும் முடங்கியிருந்த நிலையில் வங்கி துறை மட்டும் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்து இயங்கி வந்தது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பணப் பரிமாற்றம் எவ்விதமான தடையும் இல்லாமல் இயங்கியது. இதே காலகட்டத்தில் நாட்டின் முன்னணி பேமெண்ட்ஸ் வங்கியான பினோ பேமெண்ட்ஸ் வங்கி சுமார் 2 லட்ச கணக்குகளைத் திறந்து சாதனை படைத்துள்ளது.


    கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் செய்யப்பட்டு இன்று வரையில் குறிப்பிட்ட அளவிலான லாக்டவுன் இருந்து வருகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இன்று வரையில் சுமார் 2 லட்ச கணக்குகளைத் திறந்து சக வங்கிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
    வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த போதிலும், தங்களிடம் இருக்கும் குறைந்த அளவிலான ஊழியர்களை வைத்து இந்தக் காலகட்டத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
    ஜூன் காலாண்டு
    பினோ பேமெண்ட்ஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் 2.4 லட்சம் பேர் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர், இதன் மூலம் வங்கியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.
    ஏப்ரல் 1 முதல் கணக்குகளைத் திறந்த 2.4 லட்சம் பேரில் 80 சதவீதம் பேர் சேமிப்பு கணக்கையும், மீதமுள்ளவர்கள் நடப்பு கணக்கு திறந்துள்ளனர் என இவ்வங்கி தெரிவித்துள்ளது.
    டிஜிட்டல் பேங்கிங்
    புதிதாகக் கணக்குத் துவங்கியவர்கள் அனைவரும் வங்கியின் டிஜிட்டல் சேவையைப் பெற்றுள்ளனர், அதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்களது வர்த்தகத் தளத்தில் பணம் உடனடியாகப் பெற்றுள்ளனர்.
    டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளம்
    எங்கள் வங்கியின் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தள விளம்பரங்கள் மூலம் அதிகளவிலான இளைய தலைமுறையினரை வங்கி தளத்தில் சேர்க்க உதவியுள்ளது. எங்களது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் இளைய தலைமுறையினர் தான் எனப் பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை விற்பனை அதிகாரி சைலேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
    பினோ பேமெண்ட்ஸ் வங்கி
    2017 ஏப்ரலில் துவங்கப்பட்ட பினோ பேமெண்ட்ஸ் வங்கி, முதல் நாளிலேயே இந்தியாவில் 25,000க்கும் அதிகமான இடத்தில் வங்கியியல் முனைகளையும், 410 வங்கி கிளைகளையும் கொண்டு துவங்கியது.
    2006ஆம் ஆண்டு ஒரு டிஜிட்டல் பேமெண்ட் டெக்னாலஜி நிறுவனமாகத் துவங்கப்பட்ட பினோ தற்போது பினோ பேமெண்ட்ஸ் வங்கியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக