அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்த இந்த சலுகையின் கீழ் மொத்தமாக ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ள,அவை ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399, மற்றும் ரூ.599 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஆனால் புதிய வெப்/ஆப் பிரத்யேக சலுகையின் பெயர் குறிப்பிடுவது போல. இந்த சலுகையானது வோடபோன் ஐடியா வலைதளங்கள் மற்றும் வோடபோன் ஐடியா ஆப்கள் வழியாக செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகக்து.
ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம்
புதிய வெப்/ஆப் சலுகையின் அடிப்படையில் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வழக்கமான 2ஜிபி உடன் கூடுதலாக 1ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா, ஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.
ரூ.219-ப்ரீபெய்ட் திட்டம்
அதேபோல வோடபோன் ஐடியா ரூ.219-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தற்போதுள்ள 1ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்ககுpறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 1ஜிபி தினசரி டேட்டா வரம்பு தீர்ந்துவிட்டால் இந்த திட்டம் செல்லுபடியாகும் 28நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கூடுதல் டேட்டாவான 2ஜிபி-ஐ நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ஜீ 5 சந்தா உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது.
ரூ.399-திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399-திட்டம் ஆனது 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ஜீ 5 சந்தா உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது,பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும்.
ரூ.599-திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599-திட்டம் ஆனது 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ஜீ 5 சந்தா உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.
ரூ.249-திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249-திட்டம் ஆனது 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ஜீ 5 சந்தா உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக