தொலைத்தொடர்பு
நிறுவனமான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டத்தின் கிடைத்த ப்ரத்யேக இலவச சலுகையை
நிறுவனம் நீக்கியுள்ளது. அதன் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
டிராய் வெளியிட்டுள்ள
தகவல்
இந்தியத்
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்
மார்ச் மாத தொலைத் தொடர்பு சந்தா தரவின் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு
வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2020 இல் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான
சந்தாதாரர்களைச் சேர்த்த பாரதி ஏர்டெல் நிறுவனம், மார்ச் மாதக் கணக்கின் படி
சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராயின்
மார்ச் மாத குறித்து அறிக்கை
டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத
தரவின்படி பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு சேர்ந்து
ஒட்டுமொத்தமாக சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை தன் பிடியிலிருந்து
இழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டும் 63
லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்து படு மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது
என்று டிராய் தெரிவித்துள்ளது.
அம்பானி
குழு மகிழ்ச்சி
இந்த இரண்டு நிறுவனங்களின் நிலை
இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
எந்தவித சரிவையும் காணாமல், கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 46 லட்சத்துக்கும்
அதிகமான புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை தன் வட்டத்திற்குள் சேர்த்துள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பானி குழு படு ஹாப்பியாக உள்ளது.
அசைக்கமுடியாத
ரசிகர்கள்
இருப்பினும் ஏர்டெலுக்கு என
அசைக்கமுடியாத ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதன் பிரதான காரணம் ஏர்டெல்
வழங்கும் அதிவேக டேட்டாவும் ஒன்று. ஜியோ அறிமுகத்திற்கு முன்பு ஏர்டெல் ஒளிபரப்பு
செய்யும் விளம்பரமானது அதன் அதிவேக டேட்டாவுக்கு இணையான வேகத்தை யாரும்
வழங்கவில்லை என்பதாகும்.
ஏர்டெல்
தேங்க்ஸ் திட்டம்
அதேபோல்தான் ஏர்டெல் தங்களது
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரத்யேக நன்றி திட்டம். அது ஏர்டெல் தேங்க்ஸ்
திட்டமாகும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
ஜீ5
சந்தா நன்மை
இருப்பினும் இந்த ஏர்டெல் தேங்க்ஸ்
திட்டத்தில் ஜீ5 சந்தா நன்மையை நிறுவனமும் நீக்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம்
ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் சந்தா
சலுகையை இலவசமாக வழங்கியது.
ரூ.289
ப்ரீபெய்ட் திட்டம்
இப்போது இந்த ஜீ5 ப்ரீமியம் சந்தாவை
ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தை தவிர அனைத்து திட்டங்களிலும் சந்தா ப்ரீமியம் சலுகையை
திரும்பப் பெற்றுள்ளது. ஏர்டெல்லின் புதிய ரூ .289 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல்லின்
ரூ .289 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு பிரீமியம் ஜீ 5
சந்தாவை நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.
ஜீ 5 பயன்பாடு
இதன் பொருள் பயனர்கள் ஜீ 5
பயன்பாட்டில் உள்ள அனைத்து பட்டியலையும் இந்த திட்டத்தின் பயனர்கள் அணுகலாம். இந்த
பேக் மூலம் ஜீ 5 பயன்பாட்டில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களையும் நீங்கள்
இலவசமாகப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி
1.5 ஜிபி டேட்டா
திட்டத்தின் நன்மை இத்திட்டம் ஒரு
நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்
நன்மையை வழங்குகிறது. கூடுதலாக, ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக
வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உள்ளடக்கம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவுக்கான
அணுகலையும் ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ரூ.289 திட்டம் 28 நாட்கள்
செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக