கோவை
மாநகராட்சியில் கழிவுகளை அகற்ற புதிய ரோபோடிக் 2.0 என்ற ரோபோட் இயந்திரம் இன்று
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் 2.0 ரோபோட், மனித கழிவுகளைத் தானாக
அகற்றிவிடுகிறது. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்ற வேண்டிய சூழ்நிலை இனி இல்லை என்று
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
நமது
ஊரில் உள்ள அழுக்கு சாக்கடைகளைச் சுத்தம் செய்யத் துப்புரவுப் பணியாளர்கள் எந்தவித
பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் அவற்றைச் சுத்தம் செய்து வருகின்றனர். இப்படி
பாதாளச் சாக்கடை குழிகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்களின் ஆரோக்கியம்
பெரியளவில் பாதிக்கப்படுகிறது. சாக்கடை குழிகளில் உள்ள அழுக்கு மற்றும்
விசவாயுவினால் அவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிலர் மரணமும்
அடைந்துள்ளனர்.
இந்நிலையை
மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முக்கிய முயற்சியாக
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தும்
முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, தற்பொழுது
கோயம்புத்தூர் மாநகராட்சியில் மனித கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 என்ற ரோபோக்களைப்
பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இனி
மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை, இனி இந்த பணியை
மனிதர்களுக்குப் பதிலாக மனிதர்களின் உதவியோடு ரோபோட் இயந்திரங்கள் அடைப்பு
ஏற்பட்டுள்ள சாக்கடை குழிகளைச் சுத்தம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் இந்த புதிய ரோபோடிக் 2.0 இயந்திரம் வழங்கப்பட
இருக்கின்றது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
நச்சு
வாயுக்கள் மற்றும் அழுக்குகளால் நிரப்பப்பட்ட மேன்ஹோலுக்குள் இனி துப்புரவுப்
பணியாளர்கள், தங்களின் உயிரைப் பணயம் வைத்து உள்ளிறங்க வேண்டிய அவசியமில்லை. இனி
மேன்ஹோல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோடிக் 2.0 ரோபோட்கள் பயன்படுத்தப்படும்.
மானிட்டர் மற்றும் ஒரு டிஸ்பிளேயுடன் கூடிய ரோபோ தற்பொழுது சுகாதார ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக