Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தினமும் 1 எலுமிச்சையாவது ஏன் சாப்பிடணும்?... இந்த பத்து விஷயம் தான் காரணம்...

பொதுவாக லெமனை சமையலில், ஊறுகாய் போட, லெமன் ஜூஸ் என பயன்படுத்தி வந்து இருப்போம். லெமனில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் லெமன் நோயெதிரிப்பு மட்டுமல்ல இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.


இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட இதன் பலன் என்னவோ மிகப்பெரியதாக உள்ளது. இது உயர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் ஆகும். எலுமிச்சை பழத்தில் அதிகளவு விட்டமின் சி காணப்படுகிறது. ஆனால் இந்த பழத்தில் விட்டமின் சி மட்டுமல்ல நார்ச்சத்து, கால்சியம், பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இந்த பழத்தை யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். உங்க உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.  

எலுமிச்சை
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியது லெமன் விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதிலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியம், நரம்பு செயல்பாடு மற்றும் உடலின் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இவை சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியவை ஆகும். அதனால் தான் லெமன் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது.
 
 
அழற்சியை எதிர்த்து போராடுகிறது
குளிர் காலத்தில் ஏற்படும் சலதோஷம் மற்றும் இருமல் போன்ற அழற்சியை எதிர்த்து போராடுகிறது. அது மட்டுமல்ல காலரா மற்றும் ஈ.கோலை போன்ற நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. காலரா உணவு மூலம் பரவுவதால் லெமன் அதன் பரவலை தடுக்க உதவுகிறது.
 
 
இதய ஆரோக்கியம்
லெமனில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இவை இதய தமனிகளை ஆரோக்கியமாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தமனி போன்ற இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைபடுவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே உங்க நல்ல ஆரோக்கியத்திற்கு தினசரி லெமன் தோல், லெமன் ஜூஸ் மற்றும் லெமன் ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தி வரலாம்.

லெமன் பானம்
வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு கிளாஸ் லெமன் சாறு கலந்து குடித்து வாருங்கள். இது காலையில் உங்களுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது 

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது
லெமனில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் இது புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது. ஹெஸ்பெரிடின் மற்றும் டி-லிமோனீன் போன்ற சேர்மங்கள் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. எனவே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க நீங்கள் லெமனை உங்க உணவில் சேர்த்து வரலாம்.

பளபளப்பான சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் 
 
லெமன் சாற்றை முகத்தில் தேய்த்து வர உங்க சருமம் பளபளப்பாக மாற வாய்ப்பு உள்ளது. உங்க முகத்திற்கு நீங்கள் லெமன் ஆயிலை பயன்படுத்துங்கள். இது சருமத்தை மீள் தன்மை உடையதாக வைக்கவும், இளமையாக வைக்கவும் உதவுகிறது. உங்க கூந்தல் ஆரோக்கியத்திற்கு லெமன் மற்றும் தயிர் சேர்த்து பூசி வருவது கூந்தலை பளபளப்பாக வைக்கவும், தொற்று இல்லாமல் காக்கவும் உதவுகிறது. 
 
மூட்டு அழற்சி போக்குகிறது
யூரிக் அமிலம் மூட்டுகளில் சேருவது எலும்பு வலி மற்றும் அசெளகரியத்திற்கு வழிவகுக்கிறது. லெமனிலில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமிலம் குறைவதை உறுதி செய்கிறது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம் மற்றும் வீக்கம் குறைகிறது.

பற்கள் ஆரோக்கியம் 
 
உங்க பற்களை பராமரிக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி வரலாம். இது பல்லவியில் இருந்து விடுபட உதவுகிறது. புகைப்பிடித்தலால் பற்களில் ஏற்படும் நிகோடின் கரையை அகற்ற லெமன் உதவுகிறது. லெமன் சாறு கொண்டு ஈறுகளை மசாஜ் செய்யும் போது ஈறுகளில் ஏற்படும் இரத்த போக்கை நிறுத்துகிறது. மேலும் இது பல்வேறு ஈறுநோய்களில் இருந்து எழக்கூடிய துர்நாற்றத்தை போக்குகிறது.
உடல் எடை இழப்பு
சிட்ரிக் அமிலம் உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. எனவே லெமன் ஜூஸ் உங்க உடல் எடையை வெகுவாக குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறு குடிக்க பெரும்பாலானோர் பரிந்துரைக்கிறார்கள்.

நீரிழிப்பு மற்றும் பக்கவாதம்
கோடைகாலத்தில் ஏற்படும் நீரிழப்பை தடுக்க லெமன் சாறு உதவுகிறது. எனவே வெளியில் வெயிலில் செல்வதற்கு முன்பு லெமன் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது. வெப்ப பக்கவாதம் போன்ற வாய்ப்பை குறைக்கிறது.
எனவே இவ்வளவு நன்மைகள் தரும் லெமனை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக