Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் அது இந்த புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகவும் இருக்கலாமாம்!


பெண்களை தாக்கும் புற்றுநோய் பாதிப்புகளில் 2. 5% சினைப்பை புற்று நோய்.

ஆண்கள், பெண்கள் இருவரையும் பேதமில்லாமல் தாக்கும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. அமெரிக்கா புற்றுநோய் ஆய்வு நிலைய அறிக்கையின் படி பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் சினைப்பை புற்றுநோய் ஓவரியன் கேன்சர் ஆனது 8 வது இடத்தில் உள்ளது. புற்றுநோய்களில் 18 வது இடத்தில் உள்ளது.

பெண்களின் இனப்பெருக்க சுரப்புகளில் தோன்றும் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து அவசியம் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு முழுமையாக இருந்தாலே புற்று நோய் தாக்கப்பட்டால் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும். இந்த சினைப்பை புற்றுநோய் குறித்து நாம் பார்க்கலாம்.  


புற்றுநோய்


உலகளவில் பெண்களை தொடரும் புற்றுநோயின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துகொண்டே போகிறது. உடலில் செல்கள் கட்டுப்பாடில்லாமல் ஈயல்பு நிலைக்கு மாறாக வளரும் நிலை புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் இவை கண்ணுக்குத்தெரியாமல் இருந்தாலும் நாளடைவில் விபரீதமாக அதிகப்படியாக வளர்ந்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். புற்றுநோய் கட்டிகளாக திரளும். புற்றுகட்டிகள் உடலில் ஒட்டு மொத்த செயல்பாட்டை பாதிக்கிறது.

ஆண்டுக்கணக்கில் வளர்ந்து பல அறிகுறிகளை உணர்த்திய பிறகுதான் அவை ஆபத்தை உண்டாக்கவே செய்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகள் வாய், மூக்கு, தொண்டை, இரைப்பை, கல்லீரல், கருப்பை, சினைப்பை, மூளை, ரத்தம், குடல், கல்லீரல், உணவு குழாய், நுரையிரல் ரத்த புற்றுநோய் என்று பலவிதமான உறுப்புகளில் புற்றுக்கட்டிகள் உண்டாவதுண்டு. இப்போது சினைப்பை புற்றுநோய் குறித்து பார்க்கலாம்.

சினைப்பை புற்றுநோய்


பெண்ணின் உடலில் சினைப்பை மற்றும் இனப்பெருக்க சுரப்பிகளில் சினைப்பை புற்றுநோய் உண்டாகிறது. சினைப்பையில் இருக்கும் உயிரணுக்களில் கட்டிகள் வளரக்கூடும். கட்டிகளிலும் இரண்டு பிரிவுகள் உண்டு. 

ஒன்று சினைப்பையின் வெளிப்புற திசு அடுக்கில் உருவாகும் எபிதெலிக்ஸ் கட்டிகள் இவை பெரும்பாலும் புற்றுநோய் பிரிவை சார்ந்தவை. மற்றொன்று ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் கட்டிகள் வளர்ந்தால் அது ஸ்ட்ரோமல் கட்டிகள் ஆகும்.

இடுப்பு பகுதியில் சினைப்பை இருப்பதால் ஆரம்பகாலத்தில் இதன் பாதிப்பு தெரிவதில்லை. அதனால் அறிகுறிகளை கண்டதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

சினைப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள்


இதற்கென்று தனிப்பட்ட அறிகுறிகள் என்று தனியாக இல்லாவிட்டாலும். சில அறிகுறிகள் இதனோடு தொடர்பு கொண்டவையாக இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் அவசரமாக வருவது, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருப்பது, வீக்கம் உண்டாவது, வயிறு எப்போதும் நிறைந்தாற் போன்று இருப்பது, மார்பகத்தில் வலியை உணர்வது, பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு, ரத்தம் ஒழுகுதல் இவை எல்லாமே சினைப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். 

சிலருக்கு அஜீரணக்கோளாறு, மலச்சிக்கலும் இருக்கலாம். இவை தொடர்ந்து அல்லது அடிக்கடி இருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் குணப்படுத்த முடியும். மேலும் சிலருக்கு இடுப்பு வளையத்தில் வலி உண்டாகும். உடலின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். உடலுறவின் போதும் வலி உண்டாக கூடும்.

யாருக்கு வரலாம்


சினைப்பை புற்றுநோய் வருவதற்கு 10 % முதல் 40% வரை மட்டுமே வாய்ப்புண்டு. பொதுவாகவே பெண்கள் 35 வயதுக்கு பிறகு மார்பக புற்றுநோய், சினைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான பரிசோதனயை வருடம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
சினைப்பை புற்றுநோயை பொருத்தவரை 50 வயதுக்கு மேற்பட்டு 60 வயது வரை உள்ள பெண்களையே அதிகளவு பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்த சினைப்பை புற்றுநோய் புற்றுநோய் வரிசையில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. எனினும் முறையான பரிசோதனை செய்து கொள்ளும் பெண்கள் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானால் எளிதில் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். 

அதிக வயதுக்கு பிறகு குழந்தைப்பேறு, அடிக்கடி கருக்கலைப்பு, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு இந்த புற்றூநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

எப்படி கண்டறியப்படுகிறது

அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும் போது மருத்துவர் கருப்பை மற்றூம் சினைப்பையின் அளவு வடிவமைப்பு அறிந்து கொள்வார். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் கர்ப்பை, கருப்பை குழாய் சினைப்பை போன்றவற்றை பார்த்து சினைப்பையில் கட்டி இருப்பதையும் கண்டறியமுடியும். ஆனால் இந்த கட்டி எல்லாமே புற்றூநோய் கட்டியாகத்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது.

ரத்தத்தில் புரதத்தின் அளவு கணக்கிடப்படும். திசு பரிசோதனை மூலம் மாதிரி சிறிய திசு எடுத்து ஆய்வு செய்யப்படும். இவையெல்லாம் மருத்துவரின் தலைமையில் நடந்து உறுதி செய்யப்படும். பிறகு நோயின் தன்மை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பதும் எளிதாக இருக்கும். 

புற்றுநோய் மரபணு ரீதியாக வருவதை தடுக்க முடியாது. ஆனால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இவை வராமல் தடுக்க முடியும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிக உடல் எடை கொண்டிருப்பவர்களை இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக