Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய ஜியோ திட்டம்.!


ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்
ஜியோ நிறுவனம் அன்மையில் கொண்டு வந்த பல்வேறு புதிய திட்டங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இப்போது வெளிவந்த தகவல் என்னவென்றால் ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து ஐபிஎல் 2020 கிரிகெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அட்டகாசமான சேவை தேர்வு செய்யப்பட்ட ப்ரீபெய்ட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்.

இப்போதைய தகவல்களின் படி ஜியோ நிறுவனம் ஆனது ரூ.401 மற்றும் ரூ.2599 ப்ரீபெய்ட் சலுகைகளில் இலவச ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இரண்டு சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோ ஃபைபர் பயனர்களை பொருத்தவரை ரூ.849 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஜபி சேவைக்கான வருடாந்தி சந்தா போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இதில் இலவச ஜபிஎல் ஸ்டிரீமிங் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதுது.
ஆனாலும் ஜியோ ரூ.401 மற்றும் ரூ.401 மற்றும் ரூ.2599 என இரண்டு ஜியோ பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் ரூ.849 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுடன் இலவச ஐபிஎல் 2020 ஸ்டிரீமிங் சேவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோ நிறுவனத்தின் ஒரு சில தரமான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
ஜியோவிலிருந்து நீங்கள் பெறக்கூடிய மலிவான 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டம் இதுவாகும். இத்திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையையும், வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பையும், ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கென்று மொத்தம் 3,000 FUP நிமிடங்களுடன், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இத்துடன், ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவும் கிடைக்கிறது.
ஜியோவிலிருந்து 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றொரு திட்டம் இதுவாகும். தினமும் 1.5 ஜிபி டேட்டா போதாது என்பவர்களுக்கு இந்த ரூ.599 திட்டம் நல்ல சாய்ஸ். இத்திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பு, ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கு மொத்தமாக 3,000 FUP நிமிடங்கள் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவையும் ஜியோ வழங்குகிறது.
ஜியோவிலிருந்து 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இறுதி திட்டம் இதுவாகும். ஜியோவின் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம், ஆனால் இந்த திட்டத்தின் நன்மையோ அதற்கு ஏற்றார் போல அதிகம் தான். ஜியோவின் ரூ.999 திட்டத்தின் கீழ் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பு, ஜியோ-டு-ஜியோ அல்லாத அழைப்புக்கென்று மொத்தம் 3,000 FUP நிமிடங்கள் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவும் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக