சிவப்பு
பாதரசக் குப்பிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தருகிறோம் எனவும் அது பழைய வால்வு
ரேடியோக்களிலும், கதவு வைத்த சாலிடர் டிவிகளிலும் இருக்கிறது எனவும் புரளிகள்
கிழப்பிவிட்டு இதன்மூலம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளது.
சதுரங்க வேட்டை பட
காட்சி
சதுரங்க
வேட்டை படத்தில் மண்ணுளி பாம்பை விற்பனை செய்து மோசடியில் ஈடுபடும் காட்சியும்,
கிரேடியம் பேரில் மோசடி செய்யும் காட்சியும் இடம்பெறும். அதேபோல் இப்போது
உண்மையில் உருவெடுத்துள்ளது சிவப்பு பாதரசம்.
உண்மையில் சிவப்பு பாதரசம் உள்ளதா
உண்மையில்
சிவப்பு பாதரசம் உள்ளதா என்றால் அது கேள்விதான். வெள்ளை பாதரசம் நாம் அனைவரும்
அறிந்ததே. ஆனால் சிவப்பு பாதரசம் என்றால் என்ன என கேள்வி வரலாம். இந்த சிவப்பு
பாதரசம் அணு ஆயுதம் செய்வதற்கு பயன்படுகிறது எனவும் இந்த பாதரசம் தீரா நோய்களை
தீர்த்துவிடும் என புரளிகள் கிழப்பப்பட்டுள்ளது.
வீட்டில்
இருந்தால் செல்வம் குவியும்
சிவப்பு பாதரசம் அருகில் பூண்டை
கொண்டுபோனால் பாதரசம் விலகி ஓடும் அதுவே தங்கத்தை கொண்டு போனால் இரும்பும்
காந்தமும் போல் அருகில் ஓடிவரும். சிவப்பு பாதரசம் வீட்டில் இருந்தால் செல்வம்
குவியும். இதன் விலை கோடிக்கணக்கில் என கட்டுக்கதைகள் கிழப்பிவிடப்படுகின்றன.
கோடிக்கணக்கான
ரூபாய் மதிப்பு
புரளிகள் பரவுவதற்கு விளம்பரம் தேவையா
என்ன, இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவ இதைசாதகமாக வைத்து மோசடி செயலில் ஒரு
கும்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய
சிவப்பு பாதரசம் என்று வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
வதந்திகள் பரவி வருகின்றன.
பழைய ரேடியோ மற்றும் டிவி
இதை காரணமாக வைத்து கிராமபுரங்களில்
உள்ள பழைய ரேடியோ மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகளுக்கு மோசடி கும்பல் நேரடியாக
படையெடுத்து வருகின்றனர். காரணம் என்னவென்றால் அந்த டிவியில் சிவப்பு பாதரம்
இருக்காம்.
சிவப்பு பாதரச குப்பிகள்
சிவப்பு பாதரச குப்பிகளுக்கு கோடி
கணக்கான ரூபாய் கொடுக்கிறோம் என கிளப்பி விட ஒவ்வொருவரும் அதை தேடி கடைகடையாய்
வீடு வீடாய் அழைந்து பழைய மாடல் டிவிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
மரத்தாலான பழைய
வால்வு ரேடியோ
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்
என்னவென்றால் மரத்தாலான பழைய வால்வு ரேடியோ, கதவு பொருத்தப்பட்டிருக்கும் பழைய
சாலிடர் டிவிகளில் சிவப்பு பாதரச குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் புரளிகள்
கிழப்பிவிடப்பட்டுள்ளது.
30-க்கும்
மேற்பட்ட பழைய டிவிகள்
இந்த மோசடி செயலில் கோடிக்கணக்கான
பணம் பேச்சு புழக்கத்தில் வருகிறது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம்
அருகேயுள்ள நிலையூர் கண்மாயில் நள்ளிரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் சுமார்
30-க்கும் மேற்பட்ட பழைய டிவிகளை கழிவுகளாக தூக்கி எறிந்து சென்றுள்ளனர்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
வட்டார
வளர்ச்சி அலுவலர் குழு ஆய்வு
தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குழு ஆய்வு செய்தது. பின் மின்கழிவுகளை
கண்மாயில் தூக்கி எறிந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்
என்று அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஆசைவார்தைகள்
கூறி மோசடி
சிவப்பு பாதரசம் கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்புடையது என்று ஆசைவார்தைகளை கூறி வட மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்த
மோசடி கும்பல் தற்போது தென்மாவட்டங்களில் முகாமிட்டு இருக்கக்கூடும் என சந்தேகம்
எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சேலத்தில் ஒரு கும்பல் 1 மி.லி சிவப்பு
பாதரசம் 3 கோடி ரூபாய் கொடுத்தால் தருவோம் என கூறி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல்
சிக்கியது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
போலீஸார்
தரப்பில் எச்சரிக்கை
யாரும் சிவப்பு பாதரசம் என்ற ஆசை
வார்த்தையை நம்பி பணம் ஏமாற வேண்டும் என்றும் இத்தகைய மோசடி கும்பல் குறித்து
புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தரப்பில்
கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக