Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கோவையில் கொரோனாவை வென்று உறுதியுடன் மீண்டு வந்த 45 நாள் குட்டிக் குழந்தை!!

கோவையில் கொரோனாவை வென்று உறுதியுடன் மீண்டு வந்த 45 நாள் குட்டிக் குழந்தை!!
கொரோனா தொற்று (Corona Virus) நாட்டையும் உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பாரபட்சமில்லாமல் இந்தத் தொற்று அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்து வருகிறது. பலர் இந்தத் தொற்றை தோற்கடித்து குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான ஒவ்வொருவரின் போராட்டமும் ஒவ்வொரு விதமாக உள்ளது.
ஆனால், தான் இத்தகைய கொடிய ஒரு நோய்க்கு எதிராக போராடுவதே தெரியாமல் ஒரு பச்சிளங்குழந்தை இந்த போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.
கோவையில் (Coimbatore) COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட 45 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தைப் பற்றி தெரிய வந்தது. அக்குழந்தைக்கு COVID-19 தொற்றால் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கேர்க்கப்பட்டிருந்த அக்குழந்தை, உடல்நிலை மோசமாகவே, அக்குழந்தை ஆகஸ்ட் 3 ஆம் தேதி, ESI மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
குழந்தை ஆம்புலன்சில் எண்டோட்ரஷியல் குழாய் மற்றும் அம்பு-பை வென்டிலேட்டருடன் வந்ததாக இஎஸ்ஐ மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டதால், குழந்தை மயக்க நிலையிக் இருந்தது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
"நாங்கள் குழந்தையை ஒரு வென்டிலேட்டருரில் வைத்து, நரம்பு நுண்ணுயிர் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஸ்டெராய்டுகள் கொடுக்கத் துவங்கினோம். ஆகஸ்ட் 7 ஆம் தேதி, குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்கு மாற்றினோம். அங்கு மார்பின் இடது பக்கத்தில் ஒரு சிறிய துளையிட்டு, ஒரு கம்பியைச் செருகி, திரவத்தையும் காற்றையும் உள்ளே வடிகட்டினோம்.” என்றார் மருத்துவர்.
இப்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் தெரிவிகப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக