Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தேங்காய் வினிகர் சாப்பிட்டு இருக்கீங்களா? அது ஏன் மற்ற வினிகரை விட சிறந்தது?

ஆப்பிள் சிடார் வினிகரில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் அடங்கியிருக்கிறது. ஆனால், ஆப்பிள் சிடார் வினிகருக்கு மாற்றாக தேங்காய் வினிகர் புகழ்பெற்று வருகிறது. ஆசிய வெப்ப மண்டல நாடுகளில் முக்கிய உணவுப் பொருளாக இருக்கும் தேங்காய் வினிகர் அமெரிக்க சமையலறைகளுக்கு புதிய வரவாகும்.

தேங்காய் வினிகர் தேங்காய் பூக்களின் மென்சாற்றிலிருந்து அல்லது முதிர்ந்த காய்களின் இளநீரிலிருந்து பெறப்படுகிறது.

ஆப்பிள் அடிப்படையில் தயாரிக்கப்படும் வினிகரை விட தேங்காய் வினிகரில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ப்ரோபயாடிக்குகள், விட்டமின்கள், மினரல்கள் செறிந்திருக்கிறது. தேங்காய் வினிகர் ஆப்பிள் சிடர் வினிகரை விட அதிக சுவையும் அமிலத்தன்மையும் கொண்டது. இது தன் லேசான தன்மை இனிப்பு சுவையால் நம் அன்றாட வாழ்க்கையில் ஆப்பிள் சிடார் வினிகரின் இடத்தைப் பிடிக்கிறது.


ஊட்டச்சத்துக்கள்

இயற்கையான தேங்காய் வினிகரில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இது சில வகை புற்றுநோய்கள் வரும் ஆபத்தைத் தடுக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்டுகளின் மூலாதாரமாகும்.
பல்வேறு வடிவங்களில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வினிகர் செரிமானம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய்களுடன் எதிர்த்து போராடுவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

வினிகர் தயாரித்தல்

தேங்காய் வினிகர் தென்னம்பாளை அல்லது இளநீரிலிருந்து கிடைக்கும் பொருளாகும். தயாரிப்பு முறையை பொருத்து அதன் ஊட்டச்சத்து மதிப்பு வேறுபடும். தென்னங்குருதிதிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் வினிகர் இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரை விட 100 சதவிதம் தூய்மையானது அத்துடன் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.
தேங்காய் வினிகர் தயாரிப்பது சில எளிய நடைமுறைகளில் சாத்தியம் தான் என்றாலும், அதிக நேரம் எடுக்கக்கூடிய ஒரு முறையாகும்.

தென்னம்பாளையில் தயாரிக்கப்படும் வினிகர்


தென்னம்பூக்கள் முழுமையாக பூப்பதற்கு முன்னால் தென்னம்பாளை சேகரிக்கப்படுகிறது.
இந்த தென்னம்பாளை 8 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நொதிக்க விடப்படுகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பிறகு நொதிக்கப்பட்ட பதநீர் சேகரிக்கப்படுகிறது.

இளநீரில் தயாரிக்கப்படும் வினிகர்


இளநீரில் தயாரிக்கப்படும் வினிகர் முதிர்ந்த காய்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இது ஆப்பிள் சிடார் வினிகர் அல்லது கரும்புச் சர்க்கரை சேர்த்து நீர்க்க வைக்கப்படுகிறது. வீட்டிலிருக்கும் இளநீரை கொண்டு தேங்காய் வினிகர் செய்வது மிகவும் எளிது.
ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இளநீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இதில் சர்க்கரை சேர்த்து முழுவதுமாக கரைய விடுங்கள். இந்த நீரை 65 சென்டிகிரேட் வெப்பத்தில் 20 நிமிடங்கள் சூடுபடுத்துங்கள். இந்த நீர் ஆறியதும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ½ முதல் 1 டீஸ்பூன் வரை ஈஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். வினிகர் உருவாகும் 5வரை இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி வைத்து 4 முதல் 7 நாட்கள் விடுங்கள். மிகக் குறைந்த காலமாக 2 வாரங்களில் இறுதி பொருள் கிடைக்கும்.

உடல் எடை


எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தேங்காய் வினிகர் சிறந்தது. இது கலோரிகள் இல்லாத சர்க்கரை இல்லாத தேங்காய் வினிகரில் அடங்கியுள்ள அசிட்டிக் அமிலம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை தவிர்ப்பதோடு, உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.
உடற்பருமனான ஜப்பானிய ஆண்கள் மீது 2009 ஆம் ஆண்டு நடத்திய ஒரு சோதனையில் ஒரு நாளுக்கு 15 முதல் 30 மிலி தேங்காய் வினிகர் உட்கொண்டவர்களுக்கு, 12 வாரங்களில் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட கணிசமான அளவு எடை, இடுப்புச் சுற்றளவு மற்றும் ரகிளிசரைட் அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து 2017 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தேங்காய் வினிகரை வாய்வழியாக எடுத்துக் கொள்வதால் உடல் எடை, கொழுப்பு, சீரம் லிபிட் ஆகியவை குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்களை எதிர்க்கிறது


தேங்காய் வினிகரில் இருக்கு பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான மற்றும் ஆன்டி பாக்டீரியா மூலக்கூறுகளால், தொற்றுக்களிலிருந்து நம்மை காக்க உதவுகிறது.
ஒரு நொதிப்பு பொருளாக இருப்பதால், தேங்காய் வினிகர் புரோபயாடிக்குகள் நிறைந்தது. அவை குடலுக்கு நல்ல நுண்ணுயிர்களை கொண்டது.
புரோபயாடிக்கை தவிர, தேங்காய் வினிகரில் பொட்டாசியம், ஜிங்க், கால்சியம், மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது.

பாக்டீரியாக்களின் தாக்கத்தை நீக்க


மற்ற வினிகர்களைப் போலவே தேங்காய் வினிகரிலும் இயற்கையான ஆன்டி- மைக்ரோபியல் மூலக்கூறுகள் நிறைந்துள்ளது. தேங்காய் வினிகர் ஆர்கானிக் அமிலங்கள் குறிப்பாக, அசிட்டிக் அமிலம் நிறைந்தது. அசிட்டிக் அமிலம் நோய்க்கிருமிகளின் சவ்வுக்குள் பரவி காய்ச்சல் மற்றும் குளிர் போன்ற நோய்த்தொற்றுக்களை தடுப்பதோடு, நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
எந்தவொரு வினிகர் வகையும் பாக்டீரியா வளர்ச்சியை 5 சதவிகிதம் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.
தேங்காய் வினிகரை உங்கள் உணவில் பானமாக எப்படி சேர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்:
ஒரு பங்கு தேங்காய் வினிகருடன் 3 பங்கு விர்ஜின் தேனை கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையில் 1 கப் தண்ணீர் சேர்த்து அருந்துங்கள்.

அமினோ ஆசிட்டுகள்


தேங்காய் வினிகரில் ஏராளமான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் ஒன்பது அத்தியாவசிய அமிலங்களும் எட்டு அநாவசிய அமிலங்களும் உண்டு. அமினோ அமிலங்கள் புரதங்களை கட்டுமானிக்கும் தொகுதிகளாகும்.
புரதக் கட்டமைப்பு மூலக்கூறுகளாக செயல்படுவதைத் தவிர அமினோ அமிலங்கள், பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுதல், ஆன்டிபாடிகளை தொகுத்தல், ஹீமோக்ளோபினை சுமத்தல், பல்வேறு உட்கருக்கள், நரம்பியல் கடத்திகள் மற்றும் ஹார்மோன்களின் முன்னோடியாக செயல்படுதல் போன்ற பல்முனை ஒழுங்குமுறை செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
அமினோ அமிலங்கள், புரதங்களாக திசுக்களை பழுதுபார்க்கிறது, ஆன்டிபாடியாக நோயெதிர்ப்பை அதிகரிக்கிறது, அத்துடன் நரம்பியக்க கடத்தியாக செயல்பட்டு மூளைக்கு செய்திகளை கடத்துகிறது.
தேங்காய் வினிகரை குடிப்பதால், ஒரே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமான 17 அமினோ அமிலங்களை பெற உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது


தேங்காய் வினிகர் உங்கள் வயிற்றுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய புரோபயாடிக்ஸ், ப்ரீபயாடிக்ஸ் மற்றும் என்சைம்களை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்களை முழுமையாக கிரகித்து, குடலில் நுண்ணுயிர்களின் சமநிலையை பராமரித்து, செரிமான செயல்பாடுகளுக்கு உதவுவதன் மூலம் செரிமான கோளாறுகளை எளிதில் தீர்க்க உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுவதோடு தேங்காய் வினிகரில் உள்ள இயற்கையான புரோபயாடிக்ஸ் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை தூண்டுகிறது.
புரோபயாடிக்குகள் லாக்டோஸ் ஒவ்வாமை, வயிற்றப்போக்கு மற்றும் குடல் எரிச்சல் ஆகியவற்றை எதிர்த்து போராடுகிறது. ஆனால் நெஞ்செரிச்சல் அமிலத்தன்மையால் அவதிப்படும் நோயாளிகள் உணவில் வினிகரை சேர்த்துக் கொள்வதற்கு முன் அவர்களுடைய மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
பொதுவாக செரிமான நலத்திற்காக சாப்பிடுவதற்கு முன் 15 முதல் 30 மிலி வினிகருடன் நீரை கலந்து உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க


சர்க்கரை அளவுகோல் என்பது ஒரு உணவை சாப்பிட்ட பிறகு 0 முதல் 100 வரை எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது என்பதன் அளவாகும். குறைந்த சர்க்கரை அட்டவணையில் உள்ள உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கின்றன.
தேங்காய் வினிகருக்கு சர்க்கரை அட்டவணையில் மிகக் குறைந்த அளவாக 35 மதிப்பீடு இருக்கிறது. தொடர்ந்து தேங்காய் வினிகரை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதோடு, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வினிகர் உணவிற்கு பிறகான இன்சுலின் அளவுகளின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்


தேங்காய் வினிகர் அதிக மினரல்கள் மற்றும் பொட்டாசியம் அடங்கியது. எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரித்து, இரத்த அழுத்தத்தில் தீடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதை தடுக்க உதவும். இரத்தத்தில் ட்ரைக்ளைசரைட் அளவை குறைத்து இதய நலத்தை பாதுகாக்கும்.

தேங்காய் வினிகரை பயன்படுத்துவது எப்படி?


ஒரு க்ளாஸ் தண்ணீரில் 3 டீஸ்பூன் தேங்காய் வினிகர் சேர்த்து அதில் சில துளிகள் தேன் சேர்த்து பருகலாம் அல்லது உங்கள் மற்ற பானங்களிலும் இந்த வினிகரை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள் வினிகரை போலவே தேங்காய் வினிகரையும் சாலட்டுகளில் பயன்படுத்தலாம். மஞ்சள் கடுகு மற்றும் அவகடோவோடு சேர்த்து பயன்படுத்தலாம்.

க்ரீம் சாஸ்கள் தயாரிக்க


தேநீர், சுடு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளில் சேர்த்து ஆரோக்கிய டானிக்காக பயன்படுத்தலாம்.
க்ளென்ஸ் செய்த உங்கள் சருமத்திற்கு தேங்காய் வினிகரை இயற்கையான டோனராக பயன்படுத்தலாம். ஒரு பஞ்சு உருண்டையில் சில துளிகள் தேங்காய் வினிகரை விட்டு உங்கள் முகத்தை துடைக்கலாம். இது சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை கொன்று முகப்பரு வராமல் தடுக்கும்.

க்ளூட்டன் இல்லாதது


தேங்காய் வினிகர் க்ளூட்டன் இல்லாத ஒரு சைவ உணவாகும். எனவே இதை நீங்கள் தாராளமாக இதை உங்கள் உணவில் சேர்க்கலாம். தென்னம்பாளையிலிருந்து தயாரிக்கப்பட்ட வினிகரை கேட்டு வாங்குங்கள். இதில் இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் வினிகரை காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தேங்காய் வினிகர் ஏராளமான ஊட்டச்சத்துகிகளின் உறைவிடமாக இருந்த போதிலும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
ஒரே ஒரு சத்தான உணவை உங்கள் டயட்டில் சேர்ப்பதன் மூலம் மட்டுமே உங்கள் உடல்நலத்தை மாற்றிவிட முடியாது. ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு உங்கள் ஒட்டுமொத்த உணவு பழக்கத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
Description: *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக