மிக மலிவு விலையில் ஏர்டெல் நிறுவனம் 168 நாட்கள் வேலிடிட்டியுடனான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் இந்த திட்டத்தில் 10 ஜிபி டேட்டா உட்பட பல்வேறு சலுகையை வழங்குகிறது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது மை நியூ ஃபியூட்சர் போன் என பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டம் மொத்தம் செல்லுபடியாகும் நாட்கள் 168 ஆகும். இந்த திட்டத்தின் விலை ரூ.597 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு திட்டத்தின் விலை ரூ.597
ஏர்டெல் வழங்கும் சிறப்பு திட்டத்தின் விலை ரூ.597 ஆகவும் இது 168 நாட்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் கிடைக்கிறது.
தொலைபேசி வாங்கிய 30 நாட்களுக்கு மட்டுமே
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஏர்டெல் இந்த அம்சம் புதிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டமானது தொலைபேசி வாங்கிய 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஐஎம்இஐ நம்பர் மூலம் செயல்படுத்தப்படும்
ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை புதிய தொலைபேசி 30 நாட்களுக்குள் மட்டுமே செயல்படுத்தும். புதிய தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரை வைத்து ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும்.
காலம்140 நாட்களாக குறைக்கப்படும்
இந்த திட்டத்தின் அளவு கோல் பூர்த்தி செய்யாத நிலையில் இந்த திட்டத்தின் காலம் 140 நாட்களாக குறைக்கப்படும். அதோடு இது மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம் கிழக்கு மேற்கு , குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேச பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்டுள்ள பகுதிகளை தவிரப் பிறப்பகுதிகளில் இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் 112 நாட்கள் ஆகும்.
விங்க் மியூசிக் புதிய சலுகை
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் விங்க் மியூசிக் ஆனது #ExpresswithHellotune எனும் ஒரு புதிய சலுகை அறிமுகம் செய்தது. இது பயனர்களின் தங்களின் தற்போதைய மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் இசை மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
மனநிலையையும் உணர்வையும் பகிரலாம்
பயனர்கள் விரும்பும் பாடலை ஹெலோ ட்யூன் ஆக வைப்பதின் வழியாக நமது தற்போதைய மனநிலையையும் உணர்வையும் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்கள்
குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ஹலோ ட்யூன்ஸ் அனைத்து ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இது ஒரு சிறப்பு சலுகையாக ஏர்டெல் ஹலோ ட்யூன்களை அனைத்து நான்-ஏர்டெல் தேங்க்ஸ் பயனர்களுக்கும் 14நாட்களுக்கு ஒருமுறை #ExpresswithHellotune இன் ஒரு பகுதியாக இருக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக