Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

டெல்லி - லண்டன் வரை முதல் பஸ் பயணம் ரெடி! டிக்கெட் விலையை கேட்டால் ஆடிப்போய்டுவீங்க!


குருகிராம் நகரைச் சேர்ந்த ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் டெல்லியிலிருந்து லண்டனுக்கு பஸ் சேவையை அறிவித்துள்ளது, இந்த பயணம் 18 நாடுகள் வழியாக 20,000 கி.மீ. தூரத்தை 70 நாட்களில் கடந்து செல்லும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து லண்டன் வரை பஸ் போக்குவரத்துக்கு ரெடி ஆகியுள்ளதைப் பற்றித் தான் சமூக வலைத்தளம் முழுதும் பேச்சு. தற்பொழுது இந்த செய்தி வைரல் ஆகிவருகிறது.

பஸ் டு லண்டன்

அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் ஆகஸ்ட் 15 அன்று 'டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையிலான முதல் ஹாப்-ஆன் / ஹாப்-ஆஃப் பஸ் சேவையை' அறிவித்துள்ளது. இது 'பஸ் டு லண்டன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாகப் பயணம் செய்வார்கள்.

20 வகுப்பு இருக்கைகள் 

இந்த பயணத்திற்காக 20 வகுப்பு இருக்கைகள் கொண்ட சிறப்பு பஸ், வணிக வகுப்பு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பயணிக்கும் 20 பயணிகளைத் தவிர, ஒரு டிரைவர், உதவி டிரைவர், ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். பயணத்தின் போது வழிகாட்டி மட்டும் அவ்வப்போது இடைவெளியில் மாற்றப்படுவார்கள். பயணிகளின் விசா ஏற்பாடுகளையும் நிறுவனம் கவனித்துக்கொள்ளும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்!

டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பயணம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும், மேலும் பயணிகள் தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வெவ்வேறு இடங்களைத் தேர்வு செய்யலாம், அதே நேரத்தில் குறிப்பிட்ட தொகுப்பின் படி அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், டெல்லியில் இருந்து லண்டனுக்கான முழு பயணத்தையும் அவர்கள் பயன்படுத்தினால் ஒரு நபருக்கு ரூ .15 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
சாலை பயணத்திற்கான புதிய அனுபவம் 
சாலை பயணத்திற்கான புதிய அனுபவம்
துஷார் அகர்வால் மற்றும் சஞ்சய் மதன் ஆகிய இரு பயண ஆர்வலர்கள் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் லண்டனுக்கு சாலைப் பயணம் மேற்கொண்டதை அடுத்து இந்த யோசனை தற்பொழுது தயாராகியுள்ளது. அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் இணை நிறுவனர் துஷார் அகர்வால் கூறும்போதும், 'பயணத்தின் மீது ஆர்வமுள்ள பலர் லண்டனுக்கு சாலை பயணத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய பின்னர் நாங்கள் இந்த பயணத்தைத் திட்டமிட்டோம். 
பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?

70 நாள் பயணம் 

ஆகஸ்ட் 15 என்று இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது, மே 2021 இல் லண்டனுக்கு முதல் பஸ் பயணம் தொடங்கும் என்று நம்புகிறோம். கொரோனா வைரஸ் பரவுவதால் நாங்கள் பதிவுகளைத் தொடங்கவில்லை. அனைத்து நாடுகளிலும் உள்ள கொரோனா வைரஸ் நிலைமையை ஆராய்ந்த பிறகு முன் பதிவுகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 70 நாள் பயணத்தின் போது பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.

 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்

குறிப்பாக பயணிகள் 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், மேலும் பயணிகளுக்கும் அனைத்து நாடுகளிலும் இந்திய உணவு வழங்கப்படும்' என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். லண்டன் வரை பஸ் மூலம் பயணம் செய்ய நீங்கள் தயார் என்றால் இந்த நிறுவனத்தை அழைத்து நீங்கள் உங்கள் கூடுதல் சந்தேகங்களை அறிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக