Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

சொத்து தகராறு; இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்!


சொத்து தகராறு காரணமாக இளைஞரை தாக்கிய கும்பல் அவரை சிறுநீரை குடிக்க செய்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் இருந்த பத்ரக்கை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் விடுதலையானது தெரிந்து இளைஞரின் வீட்டிற்கு வந்த எதிர்தரப்பினர் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து இளைஞரை வெளியே இழுந்து சென்றுள்ளனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி அவரை சிறுநீரை குடிக்க வற்புறுத்தியுள்ளனர். 
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார் எதிர்தரப்பினரை கைது செய்துள்ளனர். குடும்ப பகை காரணமாக இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை செய்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக