Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

தெரு முழுக்க மண்டை ஓடுகள்; எந்த ஜண்டா பாத்த வேலையோ!? – பீதியில் மக்கள்!

Skeleton
பழனியில் உள்ள தெரு ஒன்றின் வீடுகளின் முகப்பில் எலும்பு கூடுகளை மர்ம நபர்கள் வைத்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி நகராட்சிக்கு உட்பட்ட தேவாங்கர் தெருவில் அதிகாலை மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்த போது மண்டையோடுகள் மற்றும் மனித எலும்பு பாகங்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விபரமறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாராவது மக்களை பீதியடைய செய்ய இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் எலும்புக்கூடுகளில் குங்குமம், மஞ்சள் போன்றவை வைத்து பூஜை செய்ததற்கான தடயங்கள் தென்படுவதால் அமானுஷ்ய நடவடிக்கைகளான பில்லி, சூனியம் போன்ற ஏதாவது இருக்குமோ என அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக