சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா கொண்டாட்ட
ஒத்திகைகளைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்தில்
சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 8, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில்
காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் உழைப்பாளா் சிலையில் இருந்து போா் நினைவுச்சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச்சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.
காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்,
அதேபோல் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்,
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை சென்றடையலாம் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக