Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

சீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்?


 சேனல்களில்,

 
அமெரிக்காவை தலைமையிமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்-ல் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் வெளியாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தொடர்ந்து அவற்றைக் களையெடுக்கும் நடவடிக்கையை கூகுள் தொடங்கியுள்ளது.இதுகுறித்த காலாண்டு அறிக்கையில், 'கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது..
நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில், தேவையற்ற அல்லது அரசியல் சாராத உள்ளடக்கம் இருந்துள்ளன. ஆனால் சில எண்ணிக்கையிலான சேனல்களின், அரசியல் தொடர்புகள் உள்ளடங்கள் இருந்த என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நீக்கப்பட்ட 2500சேனல்கள் குறித்த அடையாளத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை, இருந்தபோதிலும் சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான கிராபிகாவால் கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் காணப்பட்ட, தவறான பிரசாரத்துடன் தொடர்புடைய சேனல்கள்தான் தான் கூகுள் நிறுவனம் நீக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பின்பு இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை, ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள்,
அமெரிக்க அரசியலில் குழுப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் மனதை மாற்றும் தன்மையிலும் நூற்றுக்கணக்கான தகவல்களை சமூக ஊடகங்களிலல் பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது. அதேபோன்று மீண்டு நடைபெறாமல் இருக்க, கடந்த 4ஆண்டுகளாக கூகுள் பேஸ்புக், போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக தொடர்சியாக பல்வேறு அப்டேட்களை அளித்து வருகின்றன என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக