Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

05-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மார்கழி 21 
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சஷ்டி - Jan 04 10:01 PM – Jan 05 08:15 PM

சுக்ல பக்ஷ சப்தமி - Jan 05 08:15 PM – Jan 06 06:23 PM

நட்சத்திரம்

பூரட்டாதி - Jan 04 09:23 PM – Jan 05 08:18 PM

உத்திரட்டாதி - Jan 05 08:18 PM – Jan 06 07:06 PM

கரணம்

கௌலவம் - Jan 04 10:01 PM – Jan 05 09:09 AM

சைதுளை - Jan 05 09:09 AM – Jan 05 08:15 PM

கரசை - Jan 05 08:15 PM – Jan 06 07:20 AM

யோகம்

வ்யதீபாதம் - Jan 04 10:08 AM – Jan 05 07:32 AM

வரியான் - Jan 05 07:32 AM – Jan 06 04:50 AM

பரீகம் - Jan 06 04:50 AM – Jan 07 02:05 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:38 AM
சூரியஸ்தமம் - 6:11 PM

சந்திரௌதயம் - Jan 05 10:54 AM
சந்திராஸ்தமனம் - Jan 05 11:14 PM

அசுபமான காலம்

இராகு - 4:44 PM – 6:11 PM
எமகண்டம் - 12:25 PM – 1:51 PM
குளிகை - 3:18 PM – 4:44 PM

துரமுஹுர்த்தம் - 04:39 PM – 05:25 PM

தியாஜ்யம் - 05:25 AM – 06:56 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:02 PM – 12:48 PM

அமிர்த காலம் - 12:39 PM – 02:11 PM

பிரம்மா முகூர்த்தம் - 05:02 AM – 05:50 AM

ஆனந்ததி யோகம்

சரம் Upto - 08:18 PM
திரம்

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் தனுசு ராசியில்

சந்திர ராசி

ஜனவரி 05, 02:34 PM வரை கும்பம் ராசி, பின்னர் மீனம்

________________________________
ஞாயிறு ஹோரை

காலை

06:00 - 07:00 - சூரி - அசுபம்
07:00 - 08:00 - சுக் - சுபம்
08:00 - 09:00 - புத - சுபம்
09:00 - 10:00 - சந் - சுபம்
10:00 - 11:00 - சனி - அசுபம்
11:00 - 12:00 - குரு - சுபம்
                                                                                  பிற்பகல்
                                                                                12:00 - 01:00 - செவ் - அசுபம்
01:00 - 02:00 - சூரி - அசுபம்
02:00 - 03:00 - சுக் - சுபம்
        
மாலை 

03:00 - 04:00 - புத - சுபம்
04:00 - 05:00 - சந் - சுபம்
05:00 - 06:00 - சனி - அசுபம்
06:00 - 07:00 - குரு - சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________

இன்றைய ‌ராசி பலன்கள்
________________________________
♈ மேஷம் 

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். தம்பதியர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : அனுபவம் வெளிப்படும்
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும். 
---------------------------------------
ரிஷபம் 

திறமைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் 

கிருத்திகை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
ரோகிணி : அறிமுகங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
---------------------------------------
மிதுனம் 

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உபரி வருமான முயற்சிகள் மேம்படும். எண்ணிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : வரவுகள் உண்டாகும்.
திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 
---------------------------------------
கடகம்

உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். நிபுணர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 
ஆயில்யம் : பொறுப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்

குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் இழுபறியாகி கிடைக்கும். பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். மற்றவர்களின் செயல்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

மகம் : அலைச்சல் ஏற்படும்.
பூரம் : இழுபறியான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கன்னி

திறமைக்குண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
துலாம்

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த சஞ்சலம் விலகும். கொடுக்கல், வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். செயல்களில் இருந்துவந்த தடைகள் மறையும். உடல் அளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தந்தை வழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : புரிதல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : தடைகள் மறையும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : மாற்றங்கள் பிறக்கும்.
---------------------------------------
தனுசு

சில அனுபவம் மூலம் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். கல்வி சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதுமைகள் மூலம் லாபத்தை அடைவீர்கள். உடன் இருப்பவர்களால் நிம்மதி ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

மூலம் : தெளிவுகள் பிறக்கும். 
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : புதுமையான நாள்.
---------------------------------------
மகரம்

மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பனிப்போர் விலகும். விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நிதி நிலையில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : நெருக்கடிகள் குறையும். 
---------------------------------------
கும்பம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சு திறமைகள் மூலம் காரியசித்தி உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு  
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : தெளிவு பிறக்கும்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
---------------------------------------
மீனம்

வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமித்தமான புது விதமான சிந்தனைகள் பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : அனுபவம் மேம்படும்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் பிறக்கும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக