Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஜனவரி, 2025

09-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மார்கழி 25 
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ தசமி - Jan 08 02:26 PM – Jan 09 12:22 PM

சுக்ல பக்ஷ ஏகாதசி - Jan 09 12:22 PM – Jan 10 10:19 AM

நட்சத்திரம்

பரணி - Jan 08 04:29 PM – Jan 09 03:07 PM

கார்த்திகை - Jan 09 03:07 PM – Jan 10 01:45 PM

கரணம்

கரசை - Jan 09 01:24 AM – Jan 09 12:23 PM

வனசை - Jan 09 12:23 PM – Jan 09 11:21 PM

பத்திரை - Jan 09 11:21 PM – Jan 10 10:20 AM

யோகம்

ஸாத்தியம் - Jan 08 08:23 PM – Jan 09 05:29 PM

சுபம் - Jan 09 05:29 PM – Jan 10 02:36 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:40 AM
சூரியஸ்தமம் - 6:13 PM

சந்திரௌதயம் - Jan 09 1:57 PM
சந்திராஸ்தமனம் - Jan 10 2:53 AM

அசுபமான காலம்

இராகு - 1:53 PM – 3:20 PM
எமகண்டம் - 6:40 AM – 8:07 AM
குளிகை - 9:33 AM – 11:00 AM

துரமுஹுர்த்தம் - 10:31 AM – 11:17 AM, 03:08 PM – 03:54 PM

தியாஜ்யம் - 02:26 AM – 03:57 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:03 PM – 12:50 PM

அமிர்த காலம் - 10:34 AM – 12:05 PM

பிரம்மா முகூர்த்தம் - 05:04 AM – 05:52 AM

ஆனந்ததி யோகம்

பத்ம Upto - 03:07 PM
லம்பம்

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

சூர்யா ராசி

சூரியன் தனுசு ராசியில்

சந்திர ராசி

ஜனவரி 09, 08:46 PM வரை மேஷம் ராசி, பின்னர் ரிஷபம்

________________________________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்

பிற்பகல் 

12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்
        
மாலை 

03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________

இன்றைய ராசி பலன்கள்
________________________________
மேஷம்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வருகை மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : புரிதல்கள் உண்டாகும். 
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : அனுபவங்கள் ஏற்படும். 
---------------------------------------
ரிஷபம்

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். கால்நடைகள் செயல்களில் பொறுமை வேண்டும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும். 
ரோகிணி : அலைச்சல் மேம்படும். 
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மிதுனம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். 
திருவாதிரை : புரிதல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

புனர்பூசம் : மேன்மை ஏற்படும். 
பூசம் : ஆதரவு கிடைக்கும். 
ஆயில்யம் : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
சிம்மம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

மகம் : அறிமுகங்கள் ஏற்படும்.
பூரம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.
அஸ்தம் : விரயங்கள் உண்டாகும். 
சித்திரை : மதிப்புகள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

சித்திரை : இடர்பாடுகள் குறையும்.
சுவாதி : விரயங்கள் ஏற்படும். 
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
விருச்சிகம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை உருவாக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும். 
அனுஷம் : பிரச்சனைகள் குறையும். 
கேட்டை : தெளிவு ஏற்படும். 
---------------------------------------
தனுசு

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

மூலம் : அனுபவங்கள் உண்டாகும்.
பூராடம் : தெளிவுகள் ஏற்படும்.
உத்திராடம் : வித்தியாசமான நாள்.
---------------------------------------
மகரம்

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

உத்திராடம் : உயர்வுகள் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும். 
அவிட்டம் : தெளிவுகள் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் 

அவிட்டம் : மந்தத்தன்மை குறையும். 
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
மீனம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். தொல்லை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : வேறுபாடுகள் குறையும். 
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : அபிவிருத்தியான நாள்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!