Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கெத்து காட்டும் பிஎஸ்என்எல்: இனி எங்கேயும் டிவி பார்க்கலாம்., அட்டகாச அம்சம்!

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(பிஎஸ்என்எல்) தனது ஐபிடிவி சேவையை ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் புதுசேவை அறிமுகம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது புதுசேவையை அறிமுகம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் தொலைக்காட்சி ஐபிடிவி சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேவையானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது.

ஐபிடிவி சேவை

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் இந்த புதுசேவையான ஐபிடிவி சேவை கேரள வட்டத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளது. பிஎஸ்என்எல் கேரள பொது மேலாளர் பி.ஜி.நிர்மல் தங்களது வணிக பகுதித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலை குறிப்பிட்டார்.

சோதனை கட்டங்கள் ஆகஸ்ட் 27 முதல் 

ஐபிடிவி சேவை சோதனை கட்டங்கள் ஆகஸ்ட் 27 முதல் அக்டோபர் 31 வரை எர்ணாகுளம், அலெப்பி, திருச்சூர் போன்ற இடங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவை

குறிப்பாக பிஎஸ்என்எல் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எஃப்டிஏ சேனல்கள் வழங்கப்படும் எனவும் அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 10 ஆம் தேதி பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவை குறிப்பிட்ட பிராந்தியங்களில் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


பிப்ரவரியில் தொடங்க இலக்கு 

ஐபிடிவி சேவையானது முன்னதாக பிப்ரவரியில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அரசுக்கு சொந்த ஆபரேட்டரான பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவையின் ஒப்பந்தப்படிகை சிலவைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

5 ஜிபி இலவச தரவு

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச தரவை தரப்போவதாக அறிவித்துள்ளது. பல ரீசார்ஜ் வசதியின் அடிப்படையில் இந்த திட்டம் வழங்கப்பட்டாலும் இந்த இலவச தரவு நன்மை 22 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி இணைய சேவை 3ஜி கட்டணத்தில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு வந்தாலும் 4ஜி சேவை கிடைக்கும் பகுதியில் 3ஜி திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் 4ஜி இணைய வேகம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக