Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மேஷ ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

சூரியன் : 

நவகிரகங்களில் முதன்மையானவர். அனைவருக்கும் ஒளியை அளிக்கக்கூடியவர். சூரியனை மையமாக கொண்டே அனைத்து நவகிரகங்களும் இயங்குகின்றன. சூரியன் பற்றிய பல தகவல்களையும் நவகிரகம் என்னும் தொடர் மூலம் நாம் அறிந்தோம். இனி சூரிய தேவர் ஒவ்வொரு ராசிகளில் செய்யும் செயல்கள் மற்றும் அவரால் ஏற்படும் குணங்களை பற்றி நாம் காண்போம்.

மேஷம் :

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாயுடன், சூரியன் நட்பு கிரகமாக விளங்கூடியவர். மேலும், மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகின்றார். சூரியன் பிதுர்காரகர் ஆவார். எனவே, மேஷ ராசியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் எதையும் முன்னின்று செய்யும் தலைமைப் பண்பு கொண்டவர்கள்.

தந்தைவழி ஆதரவும் வழிகாட்டுதலும் உண்டாகும்.

பிள்ளைகள் மூலம் ஆதரவான சூழலும், பெருமையும் உண்டாகும்.

பூர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும்.

எதையும் நேர்மையாக அணுக வேண்டும் என்னும் குணமுடையவர்கள்.

முன்கோப குணம் கொண்டவராகவும் ஆனால், தாம் செய்தது தவறு என்னும் அறியும் பட்சத்தில் உடனடியாக மன்னிப்பு கேட்கும் குணம் கொண்டவர்கள்.

மனதில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசக் கூடியவர்கள்.

பெரியோர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

தொழில் திறமை கொண்டவர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

ஆன்மீக எண்ணங்கள் மிகுந்தவராகவும், சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பவர்கள்.

யாருக்கும் பயம் கொள்ளாதவராகவும், யாருக்கும் அடிபடியாத குணம் உள்ளவராகவும் இருக்கக்கூடியவர்கள்.

புத்திரர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுபவராக இருப்பார்கள்.

மேலும், சூரியன் உச்சம் பெறுவதால் சூடு சம்பந்தமான உடல் உபாதைகள், தலை வலிகள் அவ்வப்போது தோன்றக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக