Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இந்தியன் வங்கியில் பெண் நூதன மோசடி

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் இந்தியன் வங்கியில் புதன்கிழமை பெண் ஒருவர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்தார்.
வெள்ளக்கோவில் காங்கயம் சாலையில் வீரக்குமார சுவாமி கோயில் பின்புறம் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. பணி நேரத்தில் காசாளரிடம் வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 12 ஆயிரத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, 2,000 ரூபாய் நோட்டுகளாக கேட்டு வாங்கியுள்ளார்.

பிறகு வேண்டாம் என தெரிவித்து 2,000 ரூபாய் நோட்டுகளை மடித்த நிலையில் திருப்பிக் கொடுத்து, தான் முதலில் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டார். பின்னர் காசாளர் எண்ணிப்பார்த்த போது மூன்று 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லை. பட்டப்பகலில் 6,000 ரூபாய் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவி கேமரா பதிவுகளில் பார்த்த போது, அப்பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் கூட்டு என தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக