வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வேதாந்த நூல்

ஓரு நாள் ராமு உறவினரின் திருமணம் ஒன்றிற்குச் சென்றார். இதற்கு முன்பு சென்ற இரண்டு உறவினர் திருமணங்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என்றுத் திரும்பி வந்து பார்த்தால் அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால் இம்முறை தன்னுடையச் செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் இல்லை.

அதனால் ஒரு யோசனை செய்தார். ராமுவின் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் எடுத்துக்கொண்டு திருமண வீட்டுக்குள் நுழைந்தார்.

ராமுவின் கையில் ஏதோ காகிதத்தால் ஆன பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண வீட்டுக்காரர்கள், ராமு அவர்களே, கையில் என்னக் காகிதப் பொட்டலம் அதில் மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசுப்பொருள் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டனர்.

அதற்கு ராமு இது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்றார் இதை எங்கே வாங்கினீர்கள் என்று திருமண வீட்டுக்காரர்கள் கேட்டனர். செருப்புக் கடையில் வாங்கினேன் என்றார் ராமு. எப்படி வேதாந்த நூலை செருப்புக்கடையில் வாங்க முடியும் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் குழம்பிய நிலையில் இருந்தனர் திருமண வீட்டுக்காரர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்