Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மார்ச், 2019

டைனாசர் 6 - கடைசி மூச்சு


சில கோடி ஆண்டுகளுக்கு
முன் இந்த பூமியில் புழங்கிய ஒரு அரிய உயிரினத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்த பயணத்தில் பரிணாம வளர்ச்சிஅக்கால உயிர் கோட்பாடுகள்மற்றும் சுற்றுசூழல் பற்றிய தகவல்களை டைனாசர்களின் வாழ்க்கையுடன் இணைத்தே உங்களுக்கு பரிமாறினோம்.

இங்கு உங்களுடன் பகிரப்படும் பதிவு யாழ் இனிதில் டைனாசரின் இறுதிப் பயணமாகும். எங்களுடன் கை கோர்த்து டி-ரெக்ஸ்டிப்லோடாகஸ் போன்ற ராட்சத மிருகங்களின் வாழ்கையை அலசி பார்த்து அதில் உள்ள சுவாரசியங்களையும் திகில்களையும் ரசித்து பாராட்டிய உங்கள் எல்லோருக்கும் யாழ் இனிது பெரிதாக கடமை பட்டிருக்கிறது. இத்தொடரை முடித்து கொள்ளுவதில் எங்களுக்கும் மன வருத்தம் இருந்தாலும் எந்த ஒரு சகாப்தமும் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இதன் நிறைவு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.



டைனாசர் இனம் ஏன் அழிந்து போனது ?

சுமார் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னால்டைனாசர்கள் திடீரென்று இறந்து போயின (அழிந்து போனது அந்த உயிரினம்). எதனால் இவ்வாறு ஆனது என்று இது வரை உறுதியாக புலப்படவில்லைபூமிக்கண்டத்தில் நிச்சயமாக ஏற்பட்ட ஏதோ பெரிய மாறுதல் இது நிகழ்ந்தது என வேண்டுமானால் அனுமானிக்கலாம்.

எந்த காரணத்தினால் டைனாசர்கள் அழிந்து போயின என்று யாருக்கும் உறுதியாக தெரியாவிட்டாலும்விஞ்ஞானிகள் சில தத்துவங்கள் மீது இன்னமும் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.






அனுமானம் #1

இதன் படிடைனாசர்கள் ஒரு கட்டதிற்கு மேல் வளர முடியாமல் போய்விட்டன. ஒரு காலகட்டத்தில் எல்லா உயிரினங்களும் பூமியின் தட்பவெப்பம்உணவு, இருப்பு மற்றும் எதிரிகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதுஇந்த மாறுதலை டைனாசரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டதால்அவை அழிந்து போயின
 .



அனுமானம் #2

இந்த கருத்தின் படிபூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பு டைனாசர்கள் வாழ்கையை முடிவுக்கு கொண்டு சென்றது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து பூமியை வந்து மோதும் பெரிய அளவு பாறைகளை குறிக்கும். அவ்வாறு மோதிய பாறையால் பெரிய தூசி மண்டலம் ஏற்பட்டுசூரிய ஒளியை அது மறைத்திருக்க கூடும்,ஆகையால் பூமியில் உள்ள தாவரங்கள் அழிந்து போயிருக்க கூடும். அவ்வாறு தாவரங்கள் அழிந்து போனதால்பெரும்பான்மையான டைனாசர்கள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இறந்து போயின.



அனுமானம் #3

மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால்ஒரு காலத்தில் பூமியில் பல எரிமலைகள் வெடித்திருக்கலாம். அவைகளின் குழம்புகளில் உள்ள அதீத சாம்பல் துகள்கள் மற்றும் நச்சு வாயு பூமியில் பரவி இருக்கலாம். அதனால் டைனாசர்கள் சுவாசிக்க தடை ஏற்பட்டு அவைகள் இறந்து போயிருக்கலாம்.




அனுமானம் #4

நடைமுறைக்கு மிக நெருங்கிய இந்த அனுமானமானதுபல டைனாசரின் முட்டைகள் வேறு மிருகங்களால் உண்ணப்பட்டு அதன் அடுத்த தலைமுறை அழிந்து போயிருக்கலாம் என புலப்பட வைக்கிறது. தந்திரம் மிகுந்த சில உயிரினங்கள் இரவில் டைனாசர்கள் உறங்கும் பொழுது அவற்றின் முட்டைகளை தின்றதாலும்  டைனாசர் இனம் வழக்கொழிந்து போயிருக்க கூடும்.




அனுமானம் #5

ஏதேனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு டைனாசர்கள் அழிந்து போயிருக்கலாமா இந்த கூற்றின் சாத்தியம் குறைவு தான்ஏனென்றால் டைனாசர்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில்புழங்கிய பல உயிரினங்களும் அப்போது அழிந்து போயின என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. அவ்வாறு எல்லா உயிரினங்களும் ஒரே நோயினால் அழிந்திருக்க கூடும் என்று நம்புவதற்கு இல்லை.





எச்சங்கள் என்றால் என்ன ?

வெகு காலம் முன்பு வாழ்ந்து வந்த மிருகங்கள் மற்றும் தாவரங்களின் மிச்ச பகுதிகளை தான் விஞ்ஞானிகள் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பல கோடி ஆண்டுகள் முன்னரே பாறை வடிவமாக மாறிவிட்ட எலும்புகள்,பற்கள்முட்டைகள் மற்றும் கால்தடங்கள் எச்சங்களின் பகுதிகள் ஆகும்."ஜோபாரியா" மற்றும் "ஜெனென்ஷியா" என அழைக்கப்படும் புதிய வகை டைனாசர்களின் எச்சங்கள் சமீபத்தில் ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்டன.




விஞ்ஞானிகள் எச்சங்களை எவ்வாறு கண்டு பிடிக்கிறார்கள் ?
எச்சங்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.ஏனென்றால்இவைகள் பூமியின் ஆழ்ந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன.காற்று மற்றும் நீரால் மண் மற்றும் பாறைகளின் மேற்பகுதி நீக்கப்பட்ட இடங்களில் தான் பெரும்பாலும் வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இவ்வாறு கடல் அலைகளால் நீக்கப்பட்ட ஒரு பகுதியில் தான் விஞ்ஞானிகள் "லியலீனாசாரா" எனும் டைனாசரின் எச்சங்களை கண்டுபிடித்தார்கள். இதை கண்டுபிடித்த விஞ்ஞானியின் மகளின் பெயரால் அதற்கு "லியலீனாசாரா" என்று பெயர் வந்தது. அவர் புதல்வியை "டைனோ பெண்" என்று கூறினார்கள்.



டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளதா ?
டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்பது தான் உண்மையாகும். இருப்பினும் விஞ்ஞானிகள் டைனாசர் எனும் இந்த ராட்சச உயிரினத்தின் எச்சங்கள் மூலம் மேலும் புதிய தகவல்களை அறிய இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் டைனாசர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனஅது நம் எல்லோரின் மனது.

முற்றும் ....


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக