புவியியல் - விளக்கம் :
நம் பூமியை பற்றி அறிந்து கொள்ளும் படிப்பு புவியியல் எனப்படும். எவ்விதபொருள்களால் பூமி உருவானது, அப்பொருள்களின் வடிவங்கள் என்ன, எவ்வாறுஉருவாகின்றன என்று ஆராய்வதே புவியியலின் சாராம்சமாகும். பூமியில் புழங்கியஉயிரினங்கள் பற்றிய விவரங்களும் புவியியலின் அங்கமாகும். ஆக, புவியியலின்சிறப்பம்சம், பூமியில் உள்ள பொருள்கள், பொருள்களின் உருவாக்கம் மற்றும்உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதாகும்.
புவியியல் என்பது பல பிரிவுகள் அடங்கிய விஞ்ஞானமாகும். பூமியின் இயற்பியல்மற்றும் வேதியியல் கூறுகளை ஆராய்வதோடு நில்லாமல் பூமி தளத்தின்செயல்பாடு, உருவாக்கம், மற்றும் மூலத்தை பற்றிய கல்வி இது. இதன் மையம்பூமியில் பரவி கிடக்கும் தாதுப்பொருள்களின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தைசுற்றியே இருக்கிறது.
புவியியலை அறிந்துக்கொள்ளும் அவசியம் என்ன ?
இந்த கேள்விக்கு பல்வேறு விதமாக பதில் உரைக்கலாம். புவியியல் வல்லுநர்பற்பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். எரிபொருள் சிக்கணம் மற்றும் வானிலைமாற்றத்தை முன்னிறுத்தியே அவர் செய்கைகள் அமையும். இதே போல் பூமியில்எரிபொருள்கள் மூலங்களை கண்டறிவது, வளங்களை செவ்வனேபயன்படுத்துதல், மற்றும் மக்கள் மத்தியில் எரிபொருள் சிக்கனத்தை பற்றியவிழிப்புணர்சியை பரப்புவது போன்றவை அவர் தலையாயவேலையாகும். தற்போது உலகம் முழுவதும் பயணத்திற்கும், உற்பத்திக்கும்பயன்படும் எண்ணை வளம் சார்ந்த புவியியல் ஆராய்ச்சி முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது. புவியியல் அறிஞர்கள் எரிமலை வெடிப்பு மற்றும்சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டி அறிந்து, அதைதெரிவிப்பதால் மக்களை பாதுகாக்கும் பணியையும் செய்கிறார்கள்.
புவியியலின் கால அளவுகோல்கள் :
புவியியலின் கால அளவுகோல் பூமி தோன்றி 4.5 கோடி ஆண்டுகளுடன் தொடங்குகிறது. சமகாலத்தில் ஆரம்பித்து கீழே செல்ல செல்ல புவியியலின் வரலாறு அளவுகோலில் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட கால இடைவெளியில் தொடங்கி , சகாப்தம், காலகட்டம், என புவியலின் அளவு கோல் வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக 570 கோடி ஆண்டுகள் முன்புள்ள பூமியின் ஆரம்ப நிலை புவியியல் வரலாறாக கருதப்படுகிறது. இந்த காலகட்டம் "ஃபினார்சானிக் காலம்" என அழைக்கபடுகிறது.
மூன்று சகாப்தங்களாக "ஃபினார்சானிக் காலம்" வகுக்கப்படுகிறது. இதில் சமீப கால சகாப்தம் "சினோசோனிக் சகாப்தம்" என்று அழைக்கப்படுகிறது. ஃப்ளோரிடா" நகரில் பூமி தளத்திற்க்கு சில நூறு அடிகள் ஆழத்தில் காணப்பட்ட பாறைகள் மற்றும் நீர் நிலைகள் இந்த சகாப்தத்தை சேர்ந்ததாகும். "சினோசோனிக் சகாப்தம்" மேலும் இரு வகை காலமாக பிரிக்கப்படுகிறது. அவை மூன்றாம் மற்றும் நான்காம் நிலை காலங்கள் என அறியப்படுகின்றன. இது போல் புவியியல் அறிஞர்கள் ஒவ்வொரு காலதிற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளார்கள். இந்த பெயர்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் சார்ந்து அமைக்கப்பட்டன.
உதாரணத்திற்கு "செனோசோனிக்" என்றால் புதிய உயிர் " என்று பொருள். அக்காலத்தில் தான் பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் பூக்கள் தோன்றும் செடிகள் நவீன வடிவில் உருவாகின. "ரேடியோ மெட்ரிக்" எனும் துல்லிய நுணுக்கங்கள் மூலமாக அறிஞர்கள் புவியியல் மாற்றங்களை மிகச்சரியாக கணித்தார்கள். பொட்டாஷியம் போன்ற மக்கிய பொருள்கள் மற்றும் கதிவீச்சுகள் அளவுகளையும் ஒப்பிட்டு பாறைகளின் வயதை மிக சரியாக அறிஞர்கள் அனுமானித்தார்கள். புவியியல் கால எல்லைகளை விளக்கும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை காணுங்கள்.
புவியியல் அறிஞர்களின் பணி என்ன ?
பெரும்பாலும் நம் பூமியின் சரித்திரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில்அறிஞர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அறிந்துகொள்ளும் சரித்திரத்தின் மூலம்எதிர்காலத்தில் பூமியை பாதிக்ககூடிய செயல்களை அவர்கள் கணிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக