நண்பர் நல்ல பிரியாணி மாஸ்டர். நிறைய முறை அவர் வேலை செய்த ஓட்டலில்
இருந்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே இருக்கும். இவரின்
முதல் அறிமுகமே இன்னொரு நண்பர் கடலூரில் ஆரம்பித்திருந்த பிரியாணி கடையில்
மாஸ்டராய்த்தான். பின்பு பல வருடங்களுக்கு பிறகு தற்போது சொந்தமாய் பிரியாணிக்கடை
போடப் போவதாகவும், அதுவும் மொபைல் கடையாய் போடப் போவதாய் சொல்லியிருந்தார்.
சொன்னது போலவே அமாவாசை அன்று கே.கே. நகர், முனிசாமி சாலையில் ஆர்.டி.ஓ செக்
செய்யும் மைதானத்தின் ப்ளாட்பாரத்தில் ஒர் டி.வி.எஸ்.50யில், குடையோடு ஒரு
பிரியாணி கடை அமைத்திருந்தார்.
நல்ல தரமான அரிசியில், நன்கு வெந்த சிக்கன் பீசுகளோடு பிரியாணி
மணமாய் இருந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குவாலிட்டி கண்ட்ரோல் செக்
செய்து தர நிர்ணையம் கொடுத்துவிட்டேன். நல்ல தரமான சிக்கன் பிரியாணி வேண்டும்
என்கிறவர்கள் நிச்சயம் ஒர் ட்ரை செய்ய வேண்டிய இடம்.
வழக்கமாய் கையேந்தி பவன் ஓட்டல்களில் குறித்தும் விலை குறைவான
பிரியாணி என்றாலே காக்கா பிரியாணியாக இருக்குமோ என்கிற பொதுபுத்தி பயத்தை வேறு
மீடியாக்கள் கிளப்பிவிட்டிருக்க, இந்த மொபைல் கடை அந்த நம்பத்தன்மையை கொடுக்கிறதா?
என்று கேட்டீர்களானால் நிச்சயம் கொடுக்கிறது என்பேன். நல்ல தரமான பாஸுமதி
அரசியில், சரிக்கு சரி சிக்கன் போட்டு சமைக்கப்படுகிறதை நானே சாப்பிட்டு
இருப்பதால் உறுதியளிக்கிறேன்.
அடுத்த வாரத்திலிருந்து சனி தோறும் அறுபது பிரியாணி ஆர்டர் கிடைத்திருக்கிறது என்கிற செய்தியே பிரியாணியின் தரத்திற்கு இன்னொரு சான்று.
அடுத்த வாரத்திலிருந்து சனி தோறும் அறுபது பிரியாணி ஆர்டர் கிடைத்திருக்கிறது என்கிற செய்தியே பிரியாணியின் தரத்திற்கு இன்னொரு சான்று.
பல்லாவரம் யா மொய்தீன் பிரியாணி ஒரு தள்ளுவண்டியில் ஆரம்பிக்கப்
பட்டதுதான். அது போல் நண்பரின் கடையும் அமைய வாழ்த்துக்கள். ரோட்டில் நின்று
சாப்பிட விரும்பாதவர்கள், பார்சல் செய்து கொண்டு போயாவது ஆதரவு தெரிவிக்கலாம்.
ஆஃப் பிரியாணி முட்டையோடு 80 ரூபாய். குவாட்டர் முட்டையோடு 60 ருபாய்.
குடைகடை பிரியாணி
முனுசாமி சாலை
ஆர்.டி.ஓ. மைதானம் அருகில்
கே.கே.நகர்.
சென்னை
சென்னை
தொடர்புக்கு : சபா : 9600167710



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக